புதிய தொடக்கங்கள், என்னுடைய கனவு, கடின உழைப்பின் பலன் - எமோஷனலாக பிக் பாஸ் அன்ஷிதா போட்ட பதிவு
பிக் பாஸ் பிரபலம் அன்ஷிதா புது வீடு வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் தான் அன்ஷிதா மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த செல்லம்மா என்ற சீரியல் மூலம் தனக்கெனெ ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் அர்னவ். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், தன்னுடைய மனைவியை விட்டுட்டு அன்சிதாவை அர்னவ் காதலிப்பதாகவும் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.
இதனால் அர்னவ் மனைவி திவ்யா போலீசில் புகார் கொடுத்திருந்தார். இது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் அதைப்பற்றி அன்சிதா வெளியில் எதுவும் பேசவில்லை. இந்த சீரியலுக்கு பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு இருந்தார்.
சில வாரங்கள் மட்டும் தான் இவர் நிகழ்ச்சியில் வந்தார். அதற்குப் பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.
அன்ஷிதா குறித்த தகவல்:
விஜய் டிவியில் கடைசியாக பிக் பாஸ் 8 நிகழ்ச்சி நடந்து இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து இருந்தார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் அன்ஷிதாவுடன் போட்டியாளராக அர்னவ் கலந்து இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அன்ஷிதா நன்றாக விளையாடி வந்தாலும் இடையில் இவர் விஷால் மீதான காதலால் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தாமல் விட்டார்.
பிக் பாஸ் அன்ஷிதா:
விஷால் ஏற்கனவே தர்ஷிகாவை காதலிக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. இருந்தாலுமே மனம் தாங்காமல் அன்ஷிதா புலம்பி கொண்டே இருந்தார். இதனால இவர் நிகழ்ச்சி விட்டு வெளிவந்து விட்டார் என்று சொல்லலாம். மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் மொத்தம் 88 நாட்கள் இருந்தார். ஒரு நாளைக்கு இவருக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. மொத்தம் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு 21 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருந்தது.
அன்ஷிதா பதிவு:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அன்சிதா அவர்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அன்ஷிதா சொந்தமாக வீடு வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சொந்த வீடு வாங்குவதை பெருங்கனவாக அன்சிதா கொண்டிருந்தார். தற்போது இவர் தன்னுடைய சொந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்து குடியேறி இருக்கிறார். இது தொடர்பாக சந்தோஷத்தில் புகைப்படங்களை பதிவிட்டு அன்ஷிதா, புதிய தொடக்கங்கள், என்னுடைய கனவு இல்லம், என்னுடைய கனவு நனவாகிவிட்டது.
குவியும் வாழ்த்து:
இது வெறும் வீடு மட்டுமல்ல இது கடவுளின் பரிசு. ஒவ்வொரு துக்கமில்லா இரவின் ஒவ்வொரு மௌனம் பிரார்த்தனை மற்றும் ஒவ்வொரு கடின உழைப்பின் பலன். எல்லா புயல்களிலும் என்னுடன் நின்றவர்களுக்கு நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் என்னை உயர்த்தியது என்று கூறியிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.