தமிழில் கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஜீவா, அனுயா சந்தானம், சினேகா, சத்யன், ஆர்யா என்று பலர் நடித்த இந்த திரைப்படம் முழு நீள காமெடி மற்றும் காதல் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படம் நடிகர் ஜீவாவிற்கு நல்ல ஒரு கமர்சியல் படமாக அமைந்தது. இந்தப் படத்தில்தான் நடிகை அனுயா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்றாலும் இவருக்கு முன்னனி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. சிவா மனசுல சக்தி படத்தைத் தொடர்ந்து மதுரை சம்பவம் என்ற படத்தில் நடித்திருந்தார்.. ஆனால், அந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. அதன்பின்னர் நகரம் படத்தில் நடித்திருந்தார். சரியாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால் பின்னர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

Advertisement

ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவரை மறந்த நிலையில் சுசி லீக்ஸ் இவரை நினைவுபடுத்தியது.பிரபல பின்னணி பாடகியான சுசித்ராவின் பெயரில் வெளியான சுசி லீக்சில் இவரது ஆபாச படங்கள் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் இவரை ரசிகர்கள் மீண்டும் தேட ஆரம்பித்துவிட்டனர். இதனால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் வேறு எந்தத் திரைப்படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் தொலைக்காட்சி பக்கம் நடுவராக சென்றுவிட்டார். தற்போது இவரை தொலைக்காட்சிகளில் கூட பார்க்க முடியவில்லை. ஆனால்,பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே இவர் வெளியேற்றப்பட்டார்.ஆனால், தனது சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அம்மணி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisement

அந்த வகையில் சமீபத்தில் இவர் இரவு பார்ட்டி ஒன்றில் ஆணுடன் சால்சா நடனமாடிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இவர் தனது தங்கையுடன் கையில் மதுக் கோப்பையுடன் கொடுத்த போஸை கண்டு பலரும் வறுத்தெடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement