ஷங்கர் சார் அப்படி சொன்னதுக்கு அப்புறம் தான் விஜயை அடித்தேன் - நண்பன் பட நடிகை.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "நண்பன்" படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. ஹிந்தியில் சல்மான் கான் நடித்த "3 இடியட்" படத்தின் ரீ-மேக் படமாக இருபத்திலும் தமிழ் ரசிகர்ககுக்கு ஏற்ப கதாபாத்திரங்களை அமைத்து இந்த படத்தை அழகாக கொடுத்திருந்தார் இயக்குனர் ஷங்கர்.
இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்திருந்தார். இலியானாவிற்கு அக்காவாக சிவா மனசுல பட நடிகை அனுயா நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை அனுயா இந்த படத்தில் நடைபெற்ற சுவாரசிய சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் விஜயை, அனுயா அறைவது போல ஒரு காட்சி வந்திருக்கும். இதுகுறித்து அந்த பேட்டியில் பேசியுள்ள அனுயா, நண்பன் படத்தின் போது அந்த படத்தில் விஜய்யை அடிப்பது போல ஒரு காட்சி வரும் அந்த காட்சியின் போது வளர்ந்து வரும் நடிகை ஆகிய நான், எப்படி தளபதி விஜய்யை அடிப்பது என்று யோசித்தேன். அதன் பிறகு ஷங்கர் சாரிடம் இதை நான் தயங்கி தயங்கி கூறியபோது விஜய் என்று நினைக்காமல் படத்தில் வரும் பஞ்சவன் பாரிவேந்தன் என்ற கதாபாத்திரத்தை நினைத்து அடியுங்கள் என்றார். அதன் பின்னர்தான் நான்அடித்தேன் என்று கூறியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=hxDb5h_1j3g&t=70s
முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்றாலும் இவருக்கு முன்னனி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. சிவா மனசுல சக்தி படத்தைத் தொடர்ந்து மதுரை சம்பவம் என்ற படத்தில் நடித்திருந்தார்.. ஆனால், அந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. அதன்பின்னர் நகரம் படத்தில் நடித்திருந்தார். சரியாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால் பின்னர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.