பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதை தான் கத்து கொண்டேன் - மனம் திறந்த நடிகை அர்ச்சனா - என்ன தெரியுமா?

By subhashini · 24/5/2025

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகை அரச்சனா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் அர்ச்சனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ராஜா ராணி 2 என்ற சீரியலில் வில்லியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது.

இந்த சீரியலின் மூலம் அர்ச்சனாவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. இதை அடுத்து இவர்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து இருந்தார். பின் இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் பட்டத்தை வென்று இருந்தார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை தினேஷ், நான்காம் இடத்தை விஷ்ணு, ஐந்தாம் இடத்தை மாயா பிடித்து இருந்தார்கள். இதை எடுத்து அர்ச்சனா ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்.

அர்ச்சனா குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் இவர் டி மான்டி காலனி 2 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அருள்நிதியின் நடிப்பில் வெளியாகி இருந்த திகில் படம் தான் ‘டிமான்டி காலனி 2’. இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் ஆகும். இப்படத்தில் அருள் நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், பிக் பாஸ் புகழ் அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த திரில்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ற்போது பிக் பாஸ் அர்ச்சனா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அர்ச்சனா பேட்டி:

இதற்கிடையில் அர்ச்சனா அவர்கள் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணை காதலிக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது. ஆனால், இருவருமே அதை உறுதிப்படுத்தாமல் இருந்தார்கள். கடைசியாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் அருண் போட்டியாளராக கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் தான் அர்ச்சனா தன்னுடைய காதலை உறுதி செய்தார். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அர்ச்சனா சொன்னது, பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. என்னுடைய முகமூடி இல்லாத உண்மை முகத்தையும் பார்வையாளர்களிடம் காண்பிக்க வைத்தது.

பிக் பாஸ் பற்றி சொன்னது:

இந்த விஷயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் எனக்கு நெருக்கமானதாக மாற்றியது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயத்தை நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது அமைதி தான். நான் அதிகம் பேசக்கூடியவள். ஆனால், இப்போது எங்க பேச வேண்டும்? எங்கு அமைதியாக இருக்க வேண்டும்? என்பதை கற்றுக் கொண்டேன். இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
நான் மீடியாவிற்குள் வராமல் இருந்திருந்தால் ஐடியில் சேர்ந்திருப்பேன் அல்லது யுபிஎஸ்சிக்கு தயாராக இருப்பேன். காரணம், என் அப்பாவிற்கு நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக பார்க்க வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால், நான் மீடியாவை தேர்ந்தெடுத்தேன்.

லட்சியம் பற்றி சொன்னது:

இப்போது வழக்கமான கதாபாத்திரங்களை தான் ஏற்று நடித்து வருகிறேன். ஆனால், எனக்கு அதில் விருப்பமான இல்லை. வலுவான பல அடுக்குகள் கொண்ட எமோஷனல் ஆன கதாபாத்திரங்களை நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கதை நன்றாக இருந்தால் சினிமா ஓடிடி இரண்டிலும் நடிப்பேன். மாஸாக நடிப்பதை விட அர்த்தமுள்ள பார்வையாளர்களுக்கு பிடிக்கக்கூடிய கதாபாத்திரங்கள் நடிக்கவே ஆசைப்படுகிறேன். சீனியர் நடிகர்கள் ஷபானா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல், அர்ச்சனா, ஷோபனா மற்றும் நந்திதா தாஸ் எல்லோரையும் பிடிக்கும். கதாநாயகியாக அவர்கள் முத்திரை பதித்திருக்கிறார்கள். அதுபோல என்னுடைய பணியிலும் முத்திரை பதிக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full