அறுவை சிகிச்சையால் பறிபோன Mrs - Mrs சின்னத்திரை வாய்ப்பு. மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ள அர்ச்சனா.

By ·

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான அர்ச்சனாவும் ஒருவர். அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று பல்வேறு விமர்சனங்கள் கூட எழுந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா, பின்னர் விஜய் டிவியில் மீண்டும் தனது தொகுப்பாளினி பயணத்தை துவங்கினார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அர்ச்சனா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மண்டையோட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதையும் பாருங்க : குரோசோவோவுடன் மிஸ்கின் எப்படி ட்ராவல் பண்ணி இருப்பார் - மிஷ்கின் படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி.

பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அர்ச்சனாவிடம் ரசிகர்கள் பலர், மீண்டும் எப்போது உங்களை தொகுப்பாளராக பார்க்கலாம் என்று கேட்டிருந்தனர்.அதற்கு பதில் அளித்துள்ள அர்ச்சனா, நீங்கள் கேட்டுக்கொண்டால் இப்போதே நான் வரத் தயார். ஆனால், என்னுடைய வலது கால் தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன.படப்பிடிப்புக்குச் சென்றால் அங்கு 15 அல்லது 16 மணி நேரம் நிற்க வேண்டியிருக்கும். என் கால்கள் இன்னும் பலவீனமாக இருப்பதால், மீண்டும் திரும்பி வர எனக்கு சில நாட்கள் ஆகும்.

செப்டம்பர் 3ஆம் தேதி எனக்கு ஒரு பரிசோதனை உள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 10 அன்று மீண்டும் வருவேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் விஜய் டிவியிலேயே தொகுப்பாளினியாக களமிறங்கி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் நம்ம வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியில் தான் அர்ச்சனா மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கி இருக்கிறார். இதில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சினேகன் - கன்னிகா கலந்துகொள்ள இருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full