லைவில் திருமணம் செய்துகொள்ள கேட்ட நபர் - தன் அம்மா அர்ச்சனாவை வைத்து பதில் கொடுக்க வைத்த சாரா.

By Ajju · 9/4/2022

90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள்.

தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விளக்கினார் அர்ச்சனா. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ச ரி க ம ' ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

குட்டி அர்ச்சனா சாரா :

மேலும், அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சூப்பர் மாம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதே போல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர். என்னதான் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி :

அதிலும் குறிப்பாக அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் தான் அவருக்கு ஹேட்டர்ஸ்கள் உருவாகினர். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது கூட சமூக வலைதளத்தில் நெகட்டிவ் கமன்ட் செய்பவர்களை பற்றி அர்ச்சனா மகள் சாரா சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

இருப்பினும் இவர்களுக்கு சமூக வலைதளத்தில் ஹேட்டர்ஸ்கள் குறைந்தபாடில்லை. இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா மற்றும் சாரா இருவரும் விஜய் டிவியில் 'தாயில்லாமல் நான் இல்லை' என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக வந்ததை பார்த்து ஹேட்டர்ஸ்கள் திட்டி தீர்த்தனர். தற்போது சாராவும் பல நிகழ்ச்சிகளில் அடிக்கடி தொகுப்பாளினியாக பங்கேற்று வருகிறார். அதே போல படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

திருமணம் செய்துகொள்ள கேட்ட நபர் :

https://twitter.com/Mysteri13472103/status/1512740530806935556

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா, அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது Followers கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒருவர், என்னை திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேட்டிருந்தார். இதற்கு தன் அம்மாவை வைத்து பதில் அளிக்க வைத்தார் சாரா. அதில் அர்ச்சனா 'உங்க அம்மா அப்பாவ ஒரு 15 வருஷம் கழிச்சி வந்து என்கிட்டே பேச சொல்லுப்பா' என்று பதில் அளித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full