ஒரு நாளைக்கு 100 ரூபா குடுத்தா போதுமா - அர்ச்சனாவை பிராங்க் செய்துள்ள பா ரஞ்சித். அறிய வீடியோ இதோ.

By Rajkumar · 28/12/2020

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இய்குணராக அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். அந்த திரைப்படம் இளஞ்சர்கள் மத்தியில் ஒரு ஜாலியான படமாக பார்க்கப்ட்டது. அதன் பின்னர் இவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியால் தனது மூன்றாவது படத்தில் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

https://twitter.com/sivakubendiran/status/1343542024167772160

கபாலி, காலா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார். காலா படத்திற்கு பின்னர் இவருக்கு பாலிவூட்டிலும் அழைப்பு வந்தது. இயக்குனராக மட்டுமலல்லாமல் இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றறிந்த்து .

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ இயக்குனர்கள் ஆரம்ப காலத்தில் துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் தான். ஷங்கர் துவங்கி இளம் இயக்குனர்கள் வரை பலரும் ஆரம்ப காலத்தில் துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் தான் அப்படி துணை இயக்குனர்களாக பணியாற்றிய போது படங்களில் கூட தலை காண்பித்து உள்ளனர். ப ரஞ்சித் ஆரம்பத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும், வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான 'சென்னை 28 படத்தில் ஒரு சிறு காட்சியில் கூட தோன்றியுள்ளார் ரஞ்சித்.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் போட்டியளரான அர்ச்சனா பல ஆண்டுகளுக்கு முன்னர் கலந்து கொண்ட ஒரு பேட்டி ஒன்றில் அர்ச்சனாவை, பா ரஞ்சித் பிராங்க் செய்துள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், அர்ச்சனாவை ஒரு படத்திற்காக நடிக்க அழைக்கும் ரஞ்சித், அர்ச்சனாவை ஒரு நாளைக்கு 100 ரூபாய் போதுமா உங்களுக்கு என்று படு பங்கமாக கலாய்த்துள்ளார். அந்த வீடீயோவை நீங்களே பாருங்க.

Tamil Behind Talkies AMP · Quick view
View full