ஒரு குடும்பத்தில் ஒரு பொண்ணு எப்படி இருக்க கூடாதுனு உன் அம்மா தான் உதாரணம் - மோசமான கமென்டிற்கு அர்ச்சனா மகள் பதிலடி.

By Rajkumar · 26/12/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் நிறைவடைய இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம்பெற்றனர். எனவே, அந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.மற்ற போட்டியாளர்களை போல் அல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, தனது குடும்பத்தை பார்க்கப் போகிறோம் என்று தான் அர்ச்சனா இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவுடன் அவரது மகள் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுள்ளார்.

அதில் 'என்னோட பாஸி குமாரு வந்துட்டாரு, கடவுள் இருக்கான் குமாரு' என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு கீழே அர்ச்சனாவை பலர் திட்டி தீர்த்தும் இருந்தனர்.மேலும், பலர் அர்ச்சனாவின் வெளியேற்றத்தை கேலி செய்தும் இருந்தனர். ஆனால், அதற்கு எல்லாம் சற்றும் கலங்காமல் அணைத்து கமென்டிற்கு பதில் அளித்தார் அர்ச்சனாவின் மகள். மேலும், தனது அம்மா குறித்து வரும் மோசமான கமன்ட்களை எல்லாம் தேடி தேடி டெலீட் செய்துள்ளார். இதற்கான காரணத்தை கூறியுள்ள அவர், இத்தனை நாள் கழித்து வந்திருக்காங்க, இது போல கமெண்டை எல்லாம் அவர் பார்த்து கவலைக்குள்ளாக விரும்பவில்லை. அதனால் தான் அதை எல்லாம் டெலீட் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா மகள் பதிவிட்ட புகைப்படத்திற்கு கீழே இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் உங்களுக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள் ஆனால் தயவு செய்து உன்னுடைய அம்மாவின் கேவலமான குணத்தை நீ பெற்றுக் கொள்ளாதே ஒரு குடும்பத்தில் ஒரு பெண் எப்படி இருக்ககூடாது என்பதற்கு உன் அம்மாதான் உதாரணம் என்று கேவலமாக கமெண்ட் செய்திருந்தார்.

https://twitter.com/RameshSunder5/status/1342350775050125313

அதற்கு பதில் அளித்த அர்ச்சனாவின் மகள், அது என்னுடைய அம்மா அவரை எடை போட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது நான் நானாகவே இருக்கிறேன் அவர் அவராக இருக்கிறார் ஒருவரின் குணத்தைப் பற்றி அசிங்கப்படுத்துவது நிறுத்துங்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று பதில் அளித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full