சத்தமில்லாமல் நடந்த முடிந்த பிக் பாஸ் அருண் பிரசாத் - அர்ச்சனா நிச்சயதார்த்தம் - குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 1/9/2025

அருண் பிரசாத்-அர்ச்சனா நிச்சயதார்த்தம் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் மூலம் பிரபலமானவர் அருண் பிரசாத். இந்த சீரியலில் இவர் பாரதி டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். அதன் பின் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி முடிந்த ‘பிக் பாஸ் 8 ‘ நிகழ்ச்சியில் போட்டியாளராக அருண் கலந்து கொண்டார். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

அருண் பிரசாத் குறித்த தகவல்:

ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இவர் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார். மேலும், இந்த பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் தான் தன்னுடைய காதலி அர்ச்சனாவை அருண் பிரசாத் அறிமுகம் செய்து வைத்தார். அர்ச்சனா ரவிச்சந்திரன் வேறு யாரும் இல்லை சீரியல் நடிகை தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ராஜா ராணி 2 சீரியலின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அர்ச்சனா குறித்த தகவல்:

இந்த சீரியலில் இவர் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்திருந்தார். ஆரம்பத்தில் இவரைப் பற்றி விமர்சிக்கப்பட்டாலும் நாளடைவில் இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதோடு அந்த சீசனின் டைட்டில் வின்னர் பட்டத்தையும் அர்ச்சனா வென்றிருந்தார். இந்த நிகழ்ச்சி பிறகு இவர் எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை.

அருண் பிரசாத்- அர்ச்சனா காதல்:

சமீபத்தில் வந்த டிமான்டி காலனி 2 என்ற படத்தில் ஹீரோவின் தங்கையாக அர்ச்சனா நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அருணுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே காதல் இருப்பதாக வதந்திகள் பரவியது. ஆனால், இது குறித்து பெரிதாக இருவருமே வாய் திறக்காமல் இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் அருண் தன்னுடைய காதலை உறுதிப்படுத்தினார். அதற்குப் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாமே இணையத்தில் வைரலாகி வந்தது.

https://www.youtube.com/watch?v=r_YmiJ4rgLo

அருண் பிரசாத்- அர்ச்சனா நிச்சயதார்த்தம்:

திருமணம் எப்போது என்று பலருமே கேட்டு வந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் அருண் பிரசாத்- அர்ச்சனா நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள். நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆனால், கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்த இரு வீட்டாருமே திட்டம் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full