பொறந்ததுல இருந்தே நான் இப்படி தான் இருந்தேன், அது பாக்கறவங்களுக்கு பிடிக்கலைன்னா - அசல் கோளாரின் முதல் வீடியோ.

By Ajju · 2/11/2022

பிக் பாஸில் இருந்து வெளியேறிய அசல் முதன் முறையாக Live ஒன்றில் பேசி இருக்கிறார். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்காவது வாரம் நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

https://twitter.com/PhoenixWing15/status/1585603705830678528

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 6:

இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து முதல் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் இரண்டாவது எவிக்ஷனில் அசல் வெளியேறி இருக்கிறார். இந்நிலையில் அசலை நினைத்து உருகி உருகி நிவாஷினி அழும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பரிச்சியமில்லாத நபராக கலந்து கொண்டு இருந்தவர் அசல். வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார்.

நிகழ்ச்சியில் அசல் – நிவாஷினி:

இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருந்தார். குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கொலாருக்கு ஒரு கண் இருந்தது. ஆனால், குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார் அசல்.

அசல் குறித்து நிவாஷினி சொன்னது:

அதுமட்டுமில்லாமல் நிவாஸினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு பேசுவது, அவர் மடியில் உட்காருவது, அவரை கடிப்பது போன்ற பல முகம் சுழிக்கும் வேலைகளை செய்து இருந்தார். இது எல்லாம் ரசிகர்களுக்கு கடுப்பேற்றி இருந்தது. மேலும், இதுபோன்ற நபரை Red Card கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் கூறி இருந்தனர். அதோடு அசல் – நிவாஷினி காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இரண்டாவது எவிக்ஷனில் அசல் வெளியேறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=INCOTZoyS4I

அசல் கோளாறு முதல் Live :

இதனால் நிவாசினி பயங்கரமாக அழுந்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் Live ஒன்றில் பேசியுள்ள அசல் 'நான் உள்ளே யாரிடமும் தவறாக நடந்துகொள்ளவில்லை. அப்படி இருந்து இருந்தால் அங்கு இருந்தவர்கள் சொல்லி இருக்க மாட்டார்களா. நான் வீட்டில் மற்றும் சொந்தங்களுடன் எப்படி இருந்தேனோ அப்படி தான் இருந்தேன். அது மக்களுக்கு தவறாக போய்சேர்ந்து இருப்பது கஷ்டமாக இருக்கிறது. நான் தப்பு செய்து இருந்தால் மன்னித்துவிடுங்கள்' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full