என்னது அசலுக்கு வெளியில் ஒரு காதலி இருக்காரா - வைரலாகும் வீடியோ. காதலி இருக்கும் போதே இப்படியா.

By Arun · 30/10/2022

பிக் பாஸ் போட்டியாளர் அசலுக்கு வெளியில் காதலி இருப்பதாக குயின்சி கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாம் வாரம் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

https://twitter.com/salyabhai1/status/1585730817333989376

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, சாந்தி வெளியேறி இருக்கிறார்கள். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் அசல் கொலார்.

வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார். அதன் பின் இவர் சந்தோஷ் நாராயாணன் இசையில் குலுகுலு, மஹான் படங்களிலும், யுவன் இசையில் காஃபி வித் காதல் படத்திலும் பாடல்கள் எழுதி இருக்கிறார். அதேபோல், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்திலும் அசல் பாடலை எழுதி இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளிலேயே ஆயிஷாவிடம் வாடா, போடா என்று பேச தேவையில்லை என்றெல்லாம் வம்பு இழுத்து இருந்தார். ஆனால், குயின்சி, நிவாஷினியிடம் இவர் வழிந்து வழிந்து பேசி இருந்தார். குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கொலாருக்கு ஒரு கண் இருக்கிறது. குயின்சி உடைய கையை மாவு பிசைவது போல அசல் பிசைந்து இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் அசலை கண்டித்து பதிவு போட்டு இருந்தார்கள்.

பின் குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார் அசல். அதுமட்டுமில்லாமல் நிவாஸினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு அசல் கடலை போட்டு இருந்தார். அதே போல மைனாவின் கையை பிடித்து தடவியது, மகேஸ்வரியின் காலை தடவுவது போன்ற வேலையை தொடர்ந்து செய்து இருக்கிறார் அசல். இந்நிலையில் அசல்-நிவாஷினி காதல் கதை பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்து இருக்கிறது. பொதுவாகவே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் கதை உருவாவது வழக்கமான ஒன்றுதான். ஓவியா-ஆரவ், மஹத்-யாஷ்மிகா, கவின்-லாஸ்லியா போன்று ஒவ்வொரு சீசனிலும் காதல் கதை உருவாகி இருக்கிறது.

அந்த வகையில் இந்த சீசனிலும் அசல் - நிவாஷினி காதல் உருவாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அசலுக்கு வெளியில் காதலி இருப்பதாக குயின்ஸி கூறி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் 'அசலுக்கு காதலி இருக்கார் வெளியில். நிவா அவருக்கு காதலி எல்லாம் கிடையாது. அது வெறும் friendship தான்' என்று கூறியுள்ளார். வெளியில் காதலி இருக்கும் போதே அசல் இப்படி நிவாஷினியிடம் நடந்துகொள்ளவது குறித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full