தனலட்சுமி பேசும் போது ஆபாசமாக பேசினாரா அசல் ? வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 29/10/2022

தனலட்சுமியை ஆபாசமாக திட்டி அசல் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

https://twitter.com/Biggbosser1/status/1585844946744926208

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

பொம்மை டாஸ்க்:

இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து கடந்த வாரம் முதல் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் வழக்கம் போல் மூன்றாவது வாரத்தில் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்க் கொடுத்தவுடன் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி இருக்கிறது. இந்த டாஸ்க் கொடுத்ததில் இருந்து அசல் ஏற்கனவே இருந்ததை விட இன்னும் ஓவராக நடந்து கொண்டு வருகிறார்.

https://twitter.com/Sakthigs/status/1586220741124853760

வீட்டில் அசீம் குறித்த சர்ச்சை:

இவர் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மற்ற பெண்களிடம் வழிந்து வழிந்து பேசும் அசாம் தனலட்சுமியிடம் மட்டும் திமிராகவும், அடாவடித்தனமாகவும், தன்னுடைய குரல் தான் ஒலிக்க வேண்டும் என்ற நினைப்பிலும் நடந்து கொண்டு வருகிறார். அதிலும் உனக்கு என்ன தகுதி இருக்கு என்று தனலட்சுமியிடம் திமிராக நடந்து கொண்டது குறித்து ரசிகர்கள் பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்துதனலட்சுமிகும் , அசலுக்கும் செட்டே ஆகவில்லை.

https://www.youtube.com/watch?v=0-ElwqjSh60&t=14s

அசீம் செய்த செயல்:

எந்த ஒரு விஷயத்தையுமே இருவரும் மாறி மாறி விவாதம் செய்து கொண்டு வருகிறார்கள். மேலும், சில தினங்களுக்கு முன்பு போட்டியில் நிவாசினி கீழே விழுந்ததற்கு காரணம் தனலட்சுமி தான் என்று கடுமையாக திட்டி இருந்தார் அசீம். அப்போது அசலும் சேர்ந்துகொண்டு தனலட்சுமியை தொடர்ந்து தாக்கி பேசி இருந்தார். இதற்கு தனலக்ஷ்மியும் பிக் பாஸ் சொல்லட்டும் என்று பொறுமையாக இருக்கிறார். இப்படி இந்த பொம்மை டாஸ்க் பயங்கர கலவரமாக சென்றிருந்தது. இதனை அடுத்து பிக் பாஸ் போட்டியாளர்களிடம் காப்பாற்றப்பட்ட பொம்மைகள் குறித்து கேள்வி கேட்டிருந்தார்.

https://twitter.com/rajeev_sayz/status/1585740506373722112

அசீம் குறித்து தனலட்சுமி சொன்னது:

அதற்கு சிவின் அவர்கள் அசலிடம் இருந்த அசீம் பொம்மையை வெளியேற்ற நினைத்தோம். காரணம், அவருடைய விளையாட்டில் நேர்மை இல்லை என்று கூறி இருந்தார். பின் தனலட்சுமி, அவருக்கு ஒரு காரியம் வேணும் என்றால் மெதுவாக பேசுகிறார். அந்த காரியம் நம்மிடம் இல்லை என்றால் வேற மாதிரி நடந்து கொள்கிறார். அந்த விஷயம் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் அவருடைய பொம்மையை தடுக்க நினைத்தேன் என்று கூறியிருந்தார். அப்போது அசல் 'அவுசாரி முண்ட' என்று படு ஆபாசமாக பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full