விக்ரமன் அப்படி பண்ணத Telecast பண்ணல, அவர் பண்ணது செம காண்டாகிடிச்சி - அயீஷா சொன்ன உண்மை.

By Rajkumar · 15/12/2022

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 65 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 10 போட்டியாளர்கள் போக தற்போது 11 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல முகங்கள் இருக்கின்றனர் அதில் ஆயிஷாவும் ஒருவர்.

https://twitter.com/sticky_dotti/status/1602131010606755841

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சத்யா என்ற தொடர் ரசிகர்களின் மத்தியில் பேராதரவை பெற்றது. இந்த தொடரில் டாம் பாய்யாக நடித்தவர் நடிகை ஆயிஷா. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ சீரியலில் தான் நடித்தார். மேலும், இவர் தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆயிஷா பிக் பாஸ் சீசன்6ல் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.ட இந்த சீசனில் தொடக்கம் முதலே யார் என்ன சொன்னாலும் அதற்கு முரணாக கருத்து கூறிக்கொண்டு, அழுதபடி இருந்து வந்தார். அதோடு ஆயிஷா சக போட்டியாளரான அசீமுடன் சண்டை போட்டதெல்லாம் அப்போது ஹாட் டாபிக் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் ஏவிக்க்ஷன் நடத்தப்பட்டது. அதில் முதலாக ராம் வெளியேறினார், பின்னர் யாருமே எதிர்பாக்காதவாரு ஆயிஷா வெளியேறினார்.

https://twitter.com/jyozy0/status/1602913901255229445

இதனால் அவருடைய ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆயிஷாவை வெளியேற்றியது விஜய் டிவியின் சதி என்று நெட்டிசன்கள் பலம் விமர்சனம் செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் ஆயிஷா விக்கிரமனிடம் நடந்து கொண்ட விதம் சமூக வடிவத்தில் பேசி பொருளானது. ஆயிஷா வெளியேற்றத்தை கமல் அறிவித்தபோது விக்ரமன் கைதட்டியதாக நினைத்து ஆயிஷா அவர் மீது கொஞ்சம் கோபத்தில் இருந்தார்.

தன்னுடைய பெயர் அறிவித்தவுடன் ஆயிஷா விக்கிரமனிடம் உங்க சந்தோஷம் எனக்கு புரிகிறது ப்ரோ என்று கூறியிருந்தார் அதற்கு விக்ரமன் தான் ஜனனி காப்பாற்றப்பட்டு விட்டார் என்பதற்காகத்தான் கைதட்டினேன் என்று கூறியிருந்தார். அதேபோல ஆயிஷா மெயின் டோர் அருகில் வெளியேற காத்துக் கொண்டிருந்தபோது விக்ரமன் ஆயிஷாவிடம் மன்னிப்பு கேட்டார். அப்போதும் ஆயிஷா ஒன்றும் பிரச்சனை இல்லை என்பது போல விக்கிரமனை உதாசீனப்படுத்தினார்.

https://twitter.com/subash_kpm/status/1602010435120934912

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆயிஷா 'தமிழ் சார் எபிஷன் காடை காட்டிய போது விக்ரமன் அதை முதலில் பார்த்துவிட்டார். என் பெயரை பார்த்து விட்டு தான் அவர் கைதட்டினார். ஆனால், அதை ஒளிபரப்ப வில்லை. அவர் அப்படி கைதட்டியதை பார்த்து பின்னால் தான் நான் அப்படி பேசினேன். உண்மையில் சொன்னால் எனக்கு மிகவும் காண்டாக தான் இருந்தது' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full