இத்தனை சீசன்ல கமல் சார் கிட்ட யாரும் இப்படி பேசினது இல்ல - ஆயிஷாவின் Attitudeஐ திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

By Rajkumar · 31/10/2022

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, அசீம், ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி , விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் ஜி பி முத்து சில தனிப்பட்ட காரணங்களுக்காக தாமாக முன்வந்து பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

https://twitter.com/David_AdamCVF/status/1586755470026735617

இதை தொடர்ந்து கடந்த வாரம் சாந்தி வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் இருந்து அசல் வெளியேற்றப்பட்டார். நேற்றைய நிகழ்ச்சியில் தான் இந்த சீசனில் முதல் முறையாக குறும்படம் போடப்பட்டு இருந்தது. இதில் பொம்மை டாஸ்க்கின் போது ஷெரினாவை தனலட்சுமி தள்ளிவிடவில்லை என்பது உறுதியானது. ,நேற்றய நிகழ்ச்சியில் இந்த குறும்படம் போடப்பட்ட போது அதை பல முறை பார்த்த பின்பும் ஆயிஷா தனக்கு எதுவும் புரியவில்லை என்று கூறி இருந்தார்.

மேலும், தான் செய்ததை எல்லாம் சுட்டிகாட்டிய போது கூட தான் அதை செய்யவே இல்லை என்பது போல முழித்தார் ஆயிஷா. இப்படி ஒரு நிலையில் கமலிடம் ஆயிஷா மரியாதை குறைவாக பேசியதை நெட்டிசன்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். நேற்றய எபிசோடில் பொம்மை டாஸ்க்கின் போது ஆயிஷா நடந்துகொண்ட விதம் குறித்து கமல் கேட்டு கொண்டு இருந்தார். அப்போது ரக்ஷிதாவின் பொம்மையை எடுத்து குறித்து கமல் கேள்வி கேட்டார்.

https://twitter.com/VCDtweets/status/1586773568787980288

இதற்கு ஆயிஷா 'ரசிதா பொம்மையை நான் அந்த நோக்கத்தில் எடுக்கவில்லை. தயவு செய்து என்னை நீங்க அப்படி Potray பண்ணிடாதீங்க பிளஸ்' என்று கமலிடம் கூறினார் ஆயிஷா. இதை கேட்ட ரக்ஷிதாவே ஒருகனம் தர்மசங்கடத்தில் 'ஐய்யயோ' என்று கூறினார். ஆனால், ஆயிஷாவின் இந்த பேச்சை கேட்ட கமல் சிரித்தபடி 'நான் என் கேரக்டரை தான் Potray பண்ணிட்டு இருக்கிறேன்.

அவங்கவங்க potrayl எல்லாருக்கும் தெரியுமா. எனக்கு Potraiteஏ வாராது' என்று மிகவும் தன்மையுடன் ஆயிஷாவிற்கு பதிலடி கொடுத்து இருந்தார். கமல் பேசிக்கொண்டு இருக்கும் போது கூட ரக்ஷிதாவிடம் எதோ ஆயிஷா கேட்டுக்கொண்டு இருந்தார். இதை தொடர்ந்து போட்டியாளர்கள் பலரிடமும் தான் என்ன தப்பு செய்தேன் என்னை ஏன் கமல் சார் கேள்வி கேட்கிறார் என்று புலம்பிகொண்டே இருந்தார் ஆயிஷா.

ஆயிஷா, இப்படி கமலிடத்தில் நடந்துகொண்டு இருப்பது பார்வையாளர்களை மட்டுமின்றி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மத்தியிலும் ஒரு நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று வெளியான ப்ரோமோவில் கூட ஆயிஷாவை பலர் நாமினேட் செய்து இருக்கின்றனர். இதனால் இவர் இந்த வாரம் வெளியேறுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், இந்த வாரம் ஷெரினாவும் நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/gurunathaa4/status/1586775053437632512

ஏற்கனவே, இந்த சீசன் ஆரம்பத்தில் ஆயிஷா பேசும் போது சீரியலின் படப்பிடிப்பின் போது நான் தூங்கிக் கொண்டிருந்தால் என்னை எழுப்ப வரும் துணை இயக்குனர்களை அடிப்பேன். அது மட்டும் இல்லாமல் காலால் எட்டி கூட உதைத்திருக்கிறேன். இதனாலே பல துணை இயக்குனர்கள் என்னை எழுப்ப பயப்படுவார்கள் என்று கூறி இருந்தார். அப்போதும் இவர் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full