இந்த காதலரையும் பிரிகிறாரா ஆயிஷா ? - இன்ஸ்டாவில் அவரின் செயலால் குழம்பிய ரசிகர்கள்

By Arun · 1/7/2023

இன்ஸ்டகிராமில் ஆயிஷா செய்த செயலால் அவர் தனது காதலரை பிரியப் போகிறாரோ என்ற புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியலில் தான் நடித்து இருந்தார். பின்னர் இந்த சீரியலில் ஆயிஷாவுக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக தொடரில் இருந்து ஆயிஷா விலகினார்.

அதன் பின்பு இவர் மாயா என்ற சீரியலில் நடித்தார் . அந்த தொடர் மூலம் ஆயிஷா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். பின் ஜீ தமிழ் தொலைக்கஸியில் ஒளிபரப்பான சத்யா என்ற தொடரில் ஆயிஷா நடித்து இருந்தார். இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தனம்பிக்கையை வலுப்படுத்தும் படி நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் பிஸியாக நடித்து இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா:

இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்றிருந்தனர். ஆரம்பத்தில் இருந்தே ஆயிஷா போட்டியாளர்களிடம் மச்சி, மாமா,வாடா என்று ஓவராக நடந்துகொண்டு இருந்தார் . இதனால் அசலுக்கும், ஆயிஷாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதோடு பிக் பாஸ் ஓவியாவை போல் முயற்சி செய்கிறேன் என்று ஏதாவது ஒன்றை ஆயிஷா செய்து ரசிகர்கள் மத்தியில் திட்டு வாங்கிக் கொண்டுவந்தார்.

ப்படிப்பட்ட நிலையில் தான் ஆயிஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து குறைவான வாக்குகள் வெளியேறினார்.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஆயிஷா பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்துவருகிறார். இந்த நிலையில் தான் ஆயிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைபோட்டு இருந்தார். அந்த பதிவில் தன்னுடைய காதலனின் முகத்தை மறைத்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டு இருந்தார்.

ஆயிஷாவின் காதலர் :

இதன் மூலம் ஆயிஷா தன்னுடைய காதலன் யார் என்பதை விரைவில் சொல்ல இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்தது.இதற்கு முன்னரே ஆயிஷா பிக் பாஸ் வீட்டிற்குள் வராத நிலையில் நெற்றியில் குங்குமம் வைத்து புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அப்போதே இவருடைய ரசிகர்கள் திருமணம் குறித்து கேட்டனர். இப்படி ஒரு நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு முதன் முறையாக தனது காதலரின் முகத்தை காட்டி இருந்தார் ஆயிஷா.

காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஆயீஷா :

காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஆயிஷா :

இதனைத் தொடர்ந்து அடிக்கடி தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் ஆயிஷா. இந்த நிலையில் திடீரென்று தன்னுடைய instagram பக்கத்தில் தன் காதலருடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். இந்த நிலையில் ஆயிஷா தன்னுடைய காதலரை தெரிந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே ஆயிஷா இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full