அசீமை ஆரியுடன் அசீம் ரசிகர்கள் ஒப்பிட்ட நிலையில் நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 8 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

கடந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் நேற்றய நிகழ்ச்சியில் ரச்சித்தா வெளியேறி இருந்தார். இந்த சீசனில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் அசீம் கடந்த வாரம் நாமினேட் ஆகவில்லை. என்னதான் அவர் நாமினேஷனில் இல்லை என்றாலும் வாரம் வாரம் நடப்பது போல இந்த வாரமும் அவர் கமலால் வறுத்தெடுக்கப்பட்டார்.

Advertisement

இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர்.

ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். அதுவும் ஆரம்பம் முதலே விக்ரமனிடம் தான் இவருக்கு அடிக்கடி சண்டை வெடித்திக்கொண்டே இருக்கிறது. வாரா வாரம் விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவருக்கும் எதாவது ஒரு சண்டை வெடித்து கொண்டி தான் இருக்கிறது. அதே போல பெண் போட்டியாளர்களையும் அடிக்கடி தரகுறைவாக பேசி வருகிறார் அசீம்.

Advertisement

அதிலும் குறிப்பாக கடந்த சில வாரமாக அசீம, ஷிவினை அடிக்கடி தர குறைவாக பேசி வருகிறார். இதனை கமல் கூட அடிக்கடி கண்டித்து வந்து இருந்தார். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வருகிறார் அசீம். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் சனி, ஞாயிறு எபிசோடில் கமல், அசீமை வறுத்தெடுத்து இருந்தார்.

Advertisement

இந்த நிலையில் கடந்த வார எபிசோடில் கமலிடம் பேசி முடித்த பின்னர் கார்டன் ஏரியாவில் அசீம், சீசன் 4ல் ஆரி வானத்தை பார்த்து கத்தியதை போல அசீம்  ஒரு சீனை அசீமும் ட்ரை பண்ண வீட்டின் நுழைவு வாயிலுக்கு முன் சென்று தனியாக நிற்க ஆரம்பித்து விட்டார். அசீம் என்ன பண்றாரு என ஹவுஸ்மேட்ஸ் கேட்க, தலைவர் போஸ் கொடுக்கிறாரு என ஏடிகே ஒரே ஒரு டயலாக் பேசி அசீமின் அந்த ஒட்டுமொத்த பவர்ஃபுல் சீனையும் காலி செய்து விட்டார் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

சீசன் 4ல் 91 வது நாளில் ஆரி செய்த அதே விஷயத்தை அசீம் இந்த சீஸனின் 91வது நாளில் செய்து இருக்கிறார். இதனால் அசீம் தான் இந்த சீசன் வின்னர் என்று அசீம் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வந்தனர். தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் இதுவரை 5 சீசன்களை கடந்து இருக்கிறது. அதே போல பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சேர்த்து இதுவரை 6 சீசன்கள் கடந்து இருக்கிறார். இதுவரை ஆரவ், ரித்திகா, முகேன்,ஆரி, ராஜு, பாலாஜி என்று பல வெற்றியாளர்கள் இருந்தாலும் சீசன் 4 வெற்றியாளர் ஆரிக்கு மட்டுமே ஒரு தனி இடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அசீமை ஆரியுடன் ஒப்பிட்டதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement