190Bp ஒரு மணி நேரத்துல போச்சா ? அஸீமின் மயக்கம் உண்மையா ? இல்லை நாடகமா ? கேள்வி கேட்கும் ரசிகர்கள்.

By Rajkumar · 1/12/2022

அனைவரும் காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கி 49 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

https://twitter.com/DrGossipKosu/status/1597998362812293121

இன்னும் பாதி நிகழ்ச்சி மட்டுமே இருக்கும் நிலையில் பிக் பாஸ் டாக்குகளும் கடினமாகி கொண்டு வருகிறது. இந்த வாரம் அசீம் கேப்டன் பதவியை வென்றார். அசீம் கேப்டன் ஆன உடனே பல அதிரடி மாற்றங்கள் செய்து இருந்தார்.இது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டது. பின் வழக்கம் போல் பிக் பாஸ் இந்த வாரம் டாஸ்க் கொடுத்து இருக்கிறார்கள்.

பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் :

அதாவது, பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சீசனில் இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான சண்டைகள் ஏற்பட்டிருந்தது. தற்போது அதை தான் பிக் பாஸ் எதிர்பார்த்து இந்த முறை கொடுத்து இருக்கிறார். பழங்குடியினரிடம் இருக்கும் செல்வத்தை ஏலியன்கள் திருட வேண்டும். ஏலியன்கள், பழங்குடியினரை எப்படி வேண்டுமானாலும் கோபப்படுத்தலாம் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.

https://twitter.com/LillySicily/status/1598185473234829312

ஆக்ரோஷமாக ஆடும் அசீம் :

இதனால் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டதிலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான வாக்குவாதம் சென்று கொண்டிருக்கின்றது. இதில் அஸீமிடம் தான் பலரும் வம்பிழுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் கதிர் அசீம் ஆகிய இருவரும் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அசின் தனக்கு மிகவும் சோர்வாக இருப்பதாக கூறிக் கொண்டிருந்தார்.

https://twitter.com/DrGossipKosu/status/1598078619049676801

உயர் ரத்த அழுத்தத்தால் மயங்கிய அசீம் :

அந்த சமயத்தில் ஏடிகே அஸீமிற்கு காபி போட்டு எடுத்து வந்திருந்தார். அப்போது அசின் எழுந்து அந்த காபியை வாங்க முற்பட்டபோது திடீரென்று மயங்கி கீழே விழுந்து விட்டார். இதை பார்த்து கதிரவன் மற்றும் ஏடிகே இருவரும் ஒரு கணம் பதிரி போனார்கள். மயங்கி விழுந்த அசிமை எவ்வளவோ எழுப்ப முயற்சி செய்தும் அவர் எழவே இல்லை. பின்னர் அவரை மருத்துவ அறைக்கு குண்டு கட்டாக தூக்கிச் சென்றார்கள். உயர் ரத்த அழுத்தம் காரணமாக தான் அசீம் இப்படி மயங்கி விழுந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றார்.

உண்மையா நாடகமா :

பின்னர் சிறிது நேரம் கழித்து அசின் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வந்தார். டாஸ்க்கின்படி அசீம் வெளியில் தான் தூங்க வேண்டும். ஆனால், அவருக்கு உடல் நிலை சரி இல்லை என்று சொன்னதால் ஏலியன் அணியில் இருப்பவர்கள் அவரை பெட் ரூமில் தூங்க அனுமதித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அனைவரும் தூங்கிய பின்னர் எழுந்த அசீம் பூக்களை பறித்து தனது டாஸ்க்கை செய்துகொண்டு இருந்தார்.

https://twitter.com/gurunathaa4/status/1598163586764791809

ADK சொன்ன விஷயம் :

இதை தொடர்ந்து ஏலியன் அணியில் இருப்பவர்களும் அவரிடம் வாக்கு வாதம் செய்தனர். இந்த நிலையில் adk, அசீம் கண்டிப்பாக நான் உடல் நிலை சரியில்லாதது போல் நடித்தேன் என்று சொல்வான் பாருங்க என்று கூறிக்கொண்டு இருந்தார். இப்படி அசீம் நடந்து கொண்ட விதம் பலரை குழப்பமடைய செய்ய அசீம் உண்மையில் மயங்கி விழுந்தாரா இல்லை சிம்பதி ஓட்டுக்காக நடித்தாரா என்று பலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full