கமல்ஹாசனை அவமதித்தாரா அசீம்? வைரலாகும் வீடியோ. பார்வையாளர்கள் கண்டனம்.

By Ajju · 9/1/2023

பிக் பாஸ் வீட்டில் கமலை அசீம் அவமதித்துவிட்டார் என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 8 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

கடந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் நேற்றய நிகழ்ச்சியில் ரச்சித்தா வெளியேறி இருந்தார். இந்த சீசனில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் அசீம் கடந்த வாரம் நாமினேட் ஆகவில்லை. என்னதான் அவர் நாமினேஷனில் இல்லை என்றாலும் வாரம் வாரம் நடப்பது போல இந்த வாரமும் அவர் கமலால் வறுத்தெடுக்கப்பட்டார்.

இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர்.

ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். அதுவும் ஆரம்பம் முதலே விக்ரமனிடம் தான் இவருக்கு அடிக்கடி சண்டை வெடித்திக்கொண்டே இருக்கிறது. வாரா வாரம் விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவருக்கும் எதாவது ஒரு சண்டை வெடித்து கொண்டி தான் இருக்கிறது. அதே போல பெண் போட்டியாளர்களையும் அடிக்கடி தரகுறைவாக பேசி வருகிறார் அசீம்.

அதிலும் குறிப்பாக கடந்த சில வாரமாக அசீம, ஷிவினை அடிக்கடி தர குறைவாக பேசி வருகிறார். இதனை கமல் கூட அடிக்கடி கண்டித்து வந்து இருந்தார். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வருகிறார் அசீம். இப்படி ஒரு நிலையில் அசீம், கமலை அவமதித்துவிட்டார் என்ற புதிய சர்ச்சை தற்போது கிளம்பி இருக்கிறது.

சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் விக்ரமனை பார்த்து நீங்கள் இந்த வீட்டில் தொடர்கிறீர்கள் என கமல்ஹாசன் சொல்கிறார். அப்போது அங்கே இருக்கும் அசீம் தனக்கு கமல்ஹாசன் சொன்னது பிடிக்காதது போன்ற ரியாக்சனுடன் எழுந்து செல்கிறார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பலரும் மிகப்பெரிய கலைஞன் கமல்ஹாசனை, அசீம் அவமானப்படுத்திவிட்டதாக கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது.

அதில் வெற்றிபெறும் போட்டியாளர் நேரடியாக இறுதி வாரத்திற்கு அனுப்பப்படுவார்கள். இதற்காக வீட்டில் உள்ள 8 ஹவுஸ்மேட்களும் போட்டியிடுகின்றனர். அதற்கு அசீம், ரச்சிதா - ஷிவின் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று கூறுகிறார். தொடர்ந்து போட்டியாளர்களிடையே பேசிய அசீம், இங்க எல்லாம் அவங்க அவங்க பலத்தை வைத்து சேஃபா கூட்டணி வச்சுகிறாங்க என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full