குளிக்க போய் 3hr ஆகுதா, இதெல்லாம் ஒட்டினு வர வேணாம் - ஷிவினை படு மோசமாக கமன்ட் செய்த அசீம்.

By Siva · 29/12/2022

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 79 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மணிகண்டன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 9 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

https://twitter.com/im_priyaS/status/1608115806826790913

இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர்.

ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். அதுவும் ஆரம்பம் முதலே விக்ரமனிடம் தான் இவருக்கு அடிக்கடி சண்டை வெடித்திக்கொண்டே இருக்கிறது. வாரா வாரம் விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவருக்கும் எதாவது ஒரு சண்டை வெடித்து கொண்டி தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் அசீம் மற்றும் ஷிவினுக்கு ஒரு மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.

https://twitter.com/Azeemarmy2Army/status/1606336311513620488

கடந்த வாரம் "கானா காணும் காலங்கள்" டாஸ்கானது வழங்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் டாஸ்கில் முடிவில் 1 முதல் 10 வரை போட்டியாளர்கள் அவர்களே தரம் பிரித்து கொள்ளும்படி சொல்லப்பட்டது. அப்போது ஷிவின் மற்றும் அஸீமிற்கு வாக்குவாதம் ஏற்பட்ட உங்களுக்கு பேச தைரியம் இல்லை எனக் கூற அசீமுக்கும் ஷிவினிக்கும் இடையே சண்டை பூதாகரமாக வெடித்தது. அசீம் என்னை தைரியம் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு மரியாதை கெட்டுவிடும் என்று திட்டினார்.

https://twitter.com/RajkumarSundare/status/1608359444655792129

இருவருக்கும் இந்த விவாதம் சண்டையாக மாறவே "தைரியமில்லை என்றெல்லாம் சொல்லாத மூஞ்சிய பாரு ஆமைக்குஞ்சு அவிச்சு வச்ச மாதிரி இருந்து பேசுரா" என்று கேவலமாக பேசி இருந்தார். இதை கமலே சனிக்கிழமை எபிசோடில் கண்டித்து இருந்தார். இதை தொடர்ந்து 'ஷிவின் எல்லாம் வெளியில் என்கிட்ட மாட்னா, ஓ### வா ஜூஸ் புழிஞ்சுடுவேன்' என்று மோசமாக பேசி இருக்கிறார். அதை கேட்ட மைனா 'நடுவுல எதோ சொன்னயே' என்று அசீம் சொன்ன கெட்ட வார்த்தையை சுட்டிக்காட்டி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full