பேட்டியில் கமலை வாடா போடா என்று பேசினாரா அசீம் - வீடியோவால் எழுந்த அடுத்த சர்ச்சை.

By Rajkumar · 11/2/2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

அதே போல பொதுவாக வெற்றியாளரை தான் முதலில் பேச வைப்பார்கள். ஆனால், அஸீமிடன் கோப்பையை கொடுத்துவிட்டு கமல், விக்ரமனை தான் முதலில் பேச வைத்தார். இதையெல்லாம் காரணமாக சொல்லி நெட்டிசன்கள் பலரும் கமலுக்கே அசீம் வென்றது பிடிக்கவில்லை என்பது போல கூறி வருகின்றனர்.இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அடிக்கடி சண்டை வந்தது.

அப்படி சண்டை வரும் போதெல்லாம் வார இறுதியில் பஞ்சாயத்து செய்யும் கமல், பெரும்பாலும் விக்ரமன் பக்கம் நின்று தான் நியாயம் பேசினார். விக்ரமன் ஒரு அரசியல் கட்சியை சேர்த்தவர் என்பதால் தான் விக்ரமனுக்கு கமல் ஆதரவாக பேசுகிறார் என்று அடிக்கடி அசீம் ரசிகர்கள் விமர்சனம் செய்து வன்தனர். பலரும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பெருத்த அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

அதே போல பிக் பாஸ் கோப்பையை கமல், விக்ரமனை வைத்து தான் அஸீமிற்கு கொடுக்க வைத்தார். கோப்பையை வாங்கியதும் அசீம் கொண்டாட்டத்தில் ஆராவாரம் செய்ய அஸீமிடம் இருந்து ஒதுங்கி நின்ற கமல், விக்ரமன் அருகில் சென்று அவரை ஆஸ்வாசப்படுத்தினார். அசீம் பட்டத்தை வென்றது கமலுக்கே பிடிக்கவில்லை என்று ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். மகேஸ்வரி கூட இதே கருத்தை முன்வைத்தார்.

அசீம் எப்போதெல்லாம் தவறு செய்தாலும் உங்கள் மகன் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று கமல் அறிவுரை செய்துகொண்டே தான் இருந்தார். இப்படி ஒரு நிலையில் அசீம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது தனது மகன் குறித்த மீம் ஒன்று காண்பிக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்த அசீம் 'எனக்கு எல்லாமே என் பையன் தான். இந்த நிகழ்ச்சியில் இப்படி கோபப்படுகிறீர்களே உங்களை பார்த்த உங்கள் மகன் என்ன நினைப்பான் என்று சொல்கிறார்கள்.

ஏன்டா, என் மகன் கூட நேரத்தை செலவழிக்க பல ஆயிரம் மணி நேரம் இருக்கிறதுடா. அந்த ஷோவை பார்த்து தான் என் மகன் வளர வேண்டும் என்ற அவசியம் இல்லை' என்று கூறியுள்ளார். அஸீமின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் பலரும் 'கமல் சார் தான் அடிக்கடி அசீம் மகன் குறித்து அஸீமிற்கு அறிவுரை கூறி வந்தார். எனவே கமலை தான் அசீம் இப்படி பேசி இருக்கிறார்' என்று புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளனர்.

behindtalkies AMP · Quick view
View full