Freeze task உள்ளே சென்றவர்களின் பாராட்டு மழையில் நனைந்த விக்ரம் - Shrooov கரண் Modeற்கு சென்ற அசீம். வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 29/12/2022

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 79 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மணிகண்டன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 9 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

https://twitter.com/gurunathaa4/status/1608048011070025728

இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர்.

ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். அதுவும் ஆரம்பம் முதலே விக்ரமனிடம் தான் இவருக்கு அடிக்கடி சண்டை வெடித்திக்கொண்டே இருக்கிறது. வாரா வாரம் விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவருக்கும் எதாவது ஒரு சண்டை வெடித்து கொண்டி தான் இருக்கிறது. ஆனால், அஸீமிற்கு நிகராக விக்ரமனுக்கும் ஆதரவு இருந்துகொண்டு தான் வருகிறது.

https://twitter.com/winsiva1994/status/1608157908361183232

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை மைனா நந்தினி ரட்சிதா, ஏடிகே, அமுதவாணன், மணிகண்டன் என்று பலரையும் சந்திக்க அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர். Freeze டாஸ்க்கில் உள்ளே வரும் நபர்களிடம் பெரும்பாலும் மணிகண்டன் மற்றும் அசீம் தான் வெளியில் தங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தொடர்ந்து கேட்டு கொண்டு வருகின்றனர்.

https://twitter.com/whyrajawhy/status/1608042096472264704

அதிலும் குறிப்பாக அசீம், உள்ளே வருபவர்களிடன் இந்த வீட்டில் யாரை பிடிக்கும் என்ற கேள்வியை தட்டாமல் கேட்டு வருகிறார். மேலும், இதுவரை Freeze taskல் உள்ளே நுழைந்த பலரும் விக்ரமனை தான் பிடிக்கும் என்று கூறி இருந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் மைனா மற்றும் மணிகண்டன் பேசிக்கொண்டு இருக்கும் போது இந்த சீசனில் விக்ரமன் மற்றும் ஷிவின் கண்டிப்பாக பைனல் சென்று விடுவார்கள் என்று கூறி இருந்தனர்.

https://twitter.com/sumar_kumar/status/1608253261424857093

இப்படி ஒரு நிலையில் உள்ளே வரும் அனைவரும் விக்ரமனை புகழும் போதெல்லாம் அசீம் செய்த செயல் அவரது காண்டை கண்கூடாக காண்பித்து இருந்தது. ரஷிதாவை சந்திக்க அவரது பெற்றோர்கள் வந்த போது, விக்ரமனை பாராட்டினார் அப்போது விக்ரமனை பற்றி பேசியதும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார் அசீம். அதே போல ஐஸ்வர்யா ராஜேஷ் வந்த போது விக்ரமனை பாராட்டினார். அந்த சமயத்தில் Shroovv கரண் ரேஞ்சுக்கு அஸீமின் முகம் மாறியதை எல்லாம் நெட்டிசன்கள் போட்டு கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full