முக்கிய கட்சியின் பொறுப்பில் இருந்தவர், எம்.எல்.ஏவின் உறவுக்காரர் பிக் பாஸ் அசீம் - பலரும் அறிந்திராத தகவல்

By subhashini · 1/11/2022

அசீம் குறித்து பலரும் அறிந்திடாத சில தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 6:

இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து முதல் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அசல் வெளியேறி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் இருந்தே அசீம் போட்டியாளர்கள் மத்தியில் திமிராகவும், அடாவடித்தனமாகவும், தன்னுடைய குரல் தான் ஒலிக்க வேண்டும் என்ற நினைப்பிலும் நடந்து கொண்டு வருகிறார். அதிலும் இவர், ஆயிஷாவை வாடி போடி என்று மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது குறித்து ரசிகர்கள் பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

நிகழ்ச்சியில் அசீம்:

அதனை தொடர்ந்து நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து விக்ரமனிற்க்கும் அசீமிற்கும் செட்டே ஆகவில்லை. எந்த ஒரு விஷயத்தையுமே இருவரும் மாறி மாறி விவாதம் செய்து கொண்டு வருகிறார்கள். பின் நிவாசினி கீழே விழுந்ததற்கு காரணம் தனலட்சுமி தான் என்று கடுமையாக திட்டி இருந்தார் அசீம் . அது மட்டும் இல்லாமல் அத்துமீறி அசீம் கை வைத்ததாக தனலட்சுமி புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து வீட்டில் பயங்கர கலவரம் நடந்தது. கடந்த மூன்றாவது வாரம் இறுதியில் கமல், அசிமை வெளுத்து வாங்கி இருந்தார்.

அசிமை வெளுத்து வாங்கிய கமல்:

பின் குறும்படம் போட்ட பிறகு தான் செய்த தவறை உணர்ந்து அசீம், தனலட்சுமி இடம் மன்னிப்பு கேட்டிருந்தார். அதேபோல் சிவினை கிண்டல் செய்ததற்கும் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த நிலையில் அசீம் குறித்து பலரும் அறிந்திடாத விஷயம் தற்போது வெளியாகி இருக்கிறது. அசீம் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அசீம் குறித்த தகவல்:

அதற்கு பிறகு இவர் விஜய் டிவியில் தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடை குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். சமீபத்தில் முடிவடைந்த பூவே உனக்காக தொடரில் அசிம் ஹீரோவாக நடித்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளுநர் ஷா நவாஸ் இவருடைய மாமா. அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் முக்கியமான கட்சி ஒன்றில் மத்திய சென்னை பகுதி இளைஞரணி பொறுப்பில் அசீம் இருக்கிறார். சமீபத்தில் தான் அசின் அந்த பதவியை ராஜினாமாவும் செய்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full