'மன்னிப்பு கேட்காம நாங்க நடிக்க மாட்டோம்னு சொன்னாங்க' - ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அசீம் இப்படி தானா.
பிக் பாஸ் அசீமின் உண்மை முகத்தை சன் டிவி சீரியல் நடிகர் போட்டு உடைத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் தான் விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கி நான்காவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள அசீம் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் திமிராகவும், அடாவடித்தனமாகவும், தன்னுடைய குரல் தான் ஒலிக்க வேண்டும் என்ற நினைப்பிலும் நடந்து கொண்டு வருகிறார்.அதிலும் இவர், ஆயிஷாவை வாடி போடி என்று மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது குறித்து ரசிகர்கள் பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இதனால் நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து விக்ரமனிற்கும் அசீமிற்கும் செட்டே ஆகவில்லை.
அடாவடி அசீம் :
எந்த ஒரு விஷயத்தையுமே இருவரும் மாறி மாறி விவாதம் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்க் போட்டியில் நிவாசினி கீழே விழுந்ததற்கு காரணம் தனலட்சுமி தான் என்று கடுமையாக திட்டி இருந்தார் அசீம். அது மட்டும் இல்லாமல் அத்துமீறி அசீம் கை வைத்ததாக தனலட்சுமி புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து விக்ரமன், அசீம் இடம் பயங்கரமாக வாக்குவாதம் செய்து இருந்தார்.
அசீம் செய்த செயல்:
மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன் அசீம் நடந்து கொண்டதை அடுத்து போட்டியாளர்கள் முழுவதுமே ரெட் கார்டு கொடுத்திருந்தார்கள். கடந்த மூன்றாவது வாரம் இறுதியில் கமல், அசிமை வெளுத்து வாங்கி இருந்தார். பின் குறும்படம் போட்ட பிறகு தான் செய்த தவறை உணர்ந்து அசீம், தனலட்சுமி இடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.அதேபோல் சிவினை கிண்டல் செய்ததற்கும் மன்னிப்பு கேட்டிருந்தார். இப்படி பிக் பாஸ் வீட்டில் மட்டுமில்லாமல் வெளியிலேயும் அசீமிற்கு நிறைய ஹேட்டர்ஸ்கள் உருவாகியிருக்கிறார்கள்.
அசீம் குறித்து சொன்ன அருண் :
அதே சமயம் அவருக்கு ஆதரவாக சில ரசிகர்களும் இருக்கிறார்கள். கமல் கண்டித்த பிறகு அசீம் உடைய நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசி அசீம் மன்னிப்பு கேட்டதாக அஸீமுடன் நடித்த அருண் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து பேசி இருக்கும் அவர் ''அசிம் கூட `பூவே உனக்காக' தொடரில் நடிச்சிருக்கேன். அந்த சீரியலில் நடிக்கும்போது செட்ல ஹீரோயினை தகாத வார்த்தை சொல்லி திட்டிட்டார்.
மன்னிப்பு கேட்டுள்ள அசீம் :
அந்த செட்ல இருந்த எல்லா பெண் ஆர்ட்டிஸ்ட்களும் அவர் மன்னிப்பு கேட்டாதான் நாங்க நடிப்போம்னு சொல்லிட்டாங்க. அப்ப கூட அவருக்கு சப்போர்ட் பண்ணிதான் அந்த சீரியல் தயாரிப்பாளர் பேசினார். ரொம்ப உறுதியா மன்னிப்பு கேட்காம நாங்க நடிக்க மாட்டோம்னு அவங்க சொன்னதால மட்டும்தான் அசிம் மன்னிப்பு கேட்டார். அவருடைய ரியல் முகத்தைதான் அவர் பிக் பாஸ் வீட்ல காட்டிட்டு இருக்காருன்னு சொல்லுவேன். அதே மாதிரி, ஆயிஷாவையும் எனக்குத் தெரியும். அவங்களால அவங்களுடைய கோபத்தை கன்ட்ரோல் பண்ணவே முடியாது