கொடுத்த வாக்கை காப்பற்றிய அசீம் - சொன்னபடியே பிக் பாஸில் வென்ற பணத்தில் அவர் செய்த விஷயம். குவியும் பாராட்டுக்கள்.

By Ajju · 8/7/2023

சொன்னபடியே பிக் பாஸ் மூலம் வந்த பணத்தில் அசீம் செய்துள்ள செயல் பலரின் பாராட்டுக்களை குவிந்து இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சர்ச்சைக்குரிய போட்டியாளராக திகழ்ந்தவர் அசீம். 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள்.

முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது. இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வந்தனர் .

அஸீமும் சர்ச்சைகளும் :

மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர். அதே போல பொதுவாக வெற்றியாளரை தான் முதலில் பேச வைப்பார்கள். ஆனால், அஸீமிடன் கோப்பையை கொடுத்துவிட்டு கமல், விக்ரமனை தான் முதலில் பேச வைத்தார். இதையெல்லாம் காரணமாக சொல்லி நெட்டிசன்கள் பலரும் கமலுக்கே அசீம் வென்றது பிடிக்கவில்லை என்பது போல கூறி வருகின்றனர்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் பட்டத்தை வென்ற அசீம் :

இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அடிக்கடி சண்டை வந்தது. பலரும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பெருத்த அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. அதே போல பிக் பாஸ் கோப்பையை கமல், விக்ரமனை வைத்து தான் அஸீமிற்கு கொடுக்க வைத்தார். கோப்பையை வாங்கியதும் அசீம் கொண்டாட்டத்தில் ஆராவாரம் செய்ய அஸீமிடம் இருந்து ஒதுங்கி நின்ற கமல், விக்ரமன் அருகில் சென்று அவரை ஆஸ்வாசப்படுத்தினார்.

சொன்னதை செய்த அசீம் :

அதே போல என்னதான் அசீம் பட்டத்தை வென்றாலும் விக்ரமன் தோற்றத்தை பற்றி தான் சமூக வலைதளத்தில் பேசி வந்தனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதல் முறையாக அசீம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் 'நான் வெற்றி பெற்ற 50 லட்சத்தில் 25 லட்சம் ரூபாயை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கொடுப்பதாக கூறி இருந்தேன்.

View this post on Instagram

A post shared by Behind Talkies (@behindtalkies)

குவியும் பாராட்டு :

என்னதான் சொல்லும் செயலும் ஒன்றானாலும் உலகின் தலைசிறந்த சொல் செயல். நான் என்னுடைய செயலை செயல் வடிவத்தில் காண்பிக்கிறேன்' என்று கூறி இருந்தார். இந்த நிலையில் அசீம் சொன்னபடியே பிக் பாஸில் வென்ற பணத்தில் அசீம் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை வழங்கி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் பலரும் அசீமை பாராட்டி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full