வேலைக்காரியை வைத்து கிண்டல் செய்த பாலாஜி.! அசிங்கப்பட்ட மஹத்

By Ajju · 14/7/2018
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்கள் மத்தியில் மிகவும் வெறுக்க கூடிய நபராக இருந்து வருபவர் நடிகர் மஹத் தான். சமீப காலமா இவர் செய்து வரும் செயல்கள் பார்ப்பவர்களை எரிச்சலூட்டி வருகிறது. இந்நிலையில் தாடி பாலாஜி நடிகர் மஹத்தை மூக்குடைக்கும் விதமாக பேசியுள்ளார். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் நடந்த "திட்டம் போட்டு திருடுற கூட்டம்" என்ற டாஸ்கில் மஹத்திற்கும் , தாடி பாலாஜிக்கு இடையை கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது மஹத் , தாடி பாலாஜியை 'வாடா போடா' என்று திட்டிவிட்டு பின்னர் காலில் விழாத குறையாக பாலாஜியிடம் மன்னிப்பையும் கேட்டார். இருவரும் அடுத்தநாள் சமாதானம் ஆகிவிட்டது போல இருந்தாலும் பாலாஜி இருவர் மனதிலும் அந்த சண்டை ஒரு ஓரமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நேற்று (ஜூலை 13) ஒளிபரப்பான பிக் நிகழ்ச்சியில் பெண்கள் அறையில் மஹத் பெண்கள் துணியை மடித்து கொடுத்திருந்தார். அப்போது பாலாஜி ஒரு ஓரமாக தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது'பாலாஜி வீட்டில் எப்படி?' என்று நித்யாவிடம் கேட்க "வீட்டில் எல்லா வேலையையும் செய்வார்.. வேலைக்காரியை டார்ச்சர் செய்வார்" என்று கூறினார். அதற்கு மஹத் அதனை இரட்டை மொழில் புரிந்து கொண்டு "என்னது டார்ச்சர் செய்வாரா " என்று நக்கலடித்தார். அவர் கூறியதற்கு "நல்லவேளை அந்த வேலைக்காரி என் வீட்டில் வேலை செய்தார். உன் வீட்டில் செய்யவில்லை" என்று மஹத்தின் மூக்கை உடைக்கும் விதமாக பதிலிளித்தார் நடிகர் தாடி பாலாஜி.
Tamil Behind Talkies AMP · Quick view
View full