'எச்சரித்து விட்டு இருக்கலாம்' - குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட Pubg மதன் குறித்து பேசியுள்ள பாலாஜி - வெளியான ஆடியோ.

By Rajkumar · 17/3/2022

பப்ஜி மதன் குறித்து பிக் பாஸ் பாலா பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து வந்த விளையாட்டு Player’s Unknown Battle Ground’ என்பதைச் சுருக்கமாக 'PUBG’ என்று கூறுவர். போர்க்களத்தில் முகம் தெரியாத சிலருடன் அணியாக இணைந்து முகம் உள்ளவர்களைத் தாக்க வேண்டும். இது தான் அந்த விளையாட்டின் விதி. அட்டகாசமான கிராஃபிக்ஸ், பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட தீவு, விதவிதமான ஆயுதங்கள், உடைகள், தப்பிக்க உதவும் குட்டிக் குட்டி ஐடியாக்கள் என உருவாக்கப்பட்டுள்ள PUBG விளையாட்டை விளையாடாதவர்கள் மிகவும் குறைவு என்றேதான் கூற வேண்டும். இந்த விளையாடினால் பல இளசுகள் அடிமையாகி கிடக்கின்றனர்.

இந்த விளையாட்டால் பல சிறுவர்கள் வீட்டிற்கு தெரியாமல் பல லட்சம் பணத்தை செலவு செய்த கதையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டுக்கு முன் பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்து இருந்தது. இந்த 118 தடை செய்யப்பட்ட செயலியில் பப்ஜி விளையாட்டை தடை செய்தததால் இளசுகளை கடும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இருப்பினும் கொரியன் வெர்ஷன் மற்றும் VPN வெர்சன் பயன்படுத்தி பலர் விளையாடி வருகின்றனர்.

பப்ஜி மதன் கைதாக காரணம்:

இந்த பப்ஜி விளையாட்டை தடை செய்த முன்பே இதனை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து தமிழ்நாடு இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர் மதன் என்ற யூடுயூபர். விளையாடும் போது எதிரிகளை ஆபாசமாக பேசுவது தான் இவரது வழக்கம். பொதுவாக யூடுயூப் சேனல்களில் சூப்பர் சாட் என்ற அம்சத்தை பயன்படுத்தி பாலோவர்கள் தங்களால் முடிந்த பணத்தை அனுப்புவார்கள். இப்படி ஒரு நிலையில் தனது விளையாட்டு திறன் ஒரு வாய் சாமர்த்தியத்தின் மூலம் சிறுவர்ககளை கவர்ந்த மதனுக்கும் சூப்பர் சாட் மூலம் பல சிறுவர்கள் பணம் அனுப்பியுள்ளனர். அது போக கேம் விளையாடிகொண்டு இருக்கும் போது பள்ளி வயது மாணவிகளை மதன் ஆபாசமாக திட்டயதாக புகார் எழுந்தது.

https://www.youtube.com/watch?v=tq_mluC3Z4g

குண்டர் சட்டத்தில் பப்ஜி மதன்:

அதே போல toxic madhan 18 + என்ற யூடுயூப் சேனலையும் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு மதன் கேம் விளையாடி கொண்டு இருக்கும் போது இளம் பெண் ஒருவரை படு ஆபாசமாக திட்டியும், பல ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாற்றியும் இருக்கிறார். இதனால் பப்ஜி மதன் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடைசெய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின் கைது செய்யப்பட்டு மதன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால் அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கை ரத்து செய்ய கோரி பப்ஜி மதன் மனைவி மனு தாக்கல்:

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதன் தாக்கல் செய்தார். மேலும், பல மாதங்களாக இந்த வழக்கு நீடித்து வருவதால் முன்கூட்டியே விசாரிக்க கோரி மதனின் மனைவி கிருத்திகா மனுத்தாக்கல் செய்திருந்தார். ஏழு மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மதன் தரப்பில் வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இப்படி மதனின் வழக்கு இழுத்துக் கொண்டே செல்கிறது.

பப்ஜி மதன் குறித்து பாலா கூறியது:

இந்த நிலையில் மதன் குறித்து பிக்பாஸ் பிரபலம் பாலா பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதில் பாலா கூறியிருப்பது, பப்ஜி விளையாடுவது ஒரு குத்தமா? சோசியல் மீடியாவில் ஏதேதோ பேசுகிறார்கள். இதெல்லாம் ஒரு பிரச்சனையா? உண்மை என்னவென்றால் மதன் அதிகமாக பேசி விட்டார். அவர் பேசாமல் அமைதியாக இருந்திருந்தால் இந்த பிரச்சனை இல்லை. அதோடு இந்த பிரச்சனைக்காக இத்தனை நாள் சிறையில் வைக்க தேவை இல்லை. மதன் பேசுவதுபோல் யூடியூபில் நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனால், மதனை ஒரு கடுமையான சட்டத்திற்கு உள்ள தள்ளி இருக்க தேவையில்லை.

அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா :

எச்சரிக்கை கொடுத்து விட்டிருக்கலாம். தப்பா பேசுவதை சரி என்று சொல்லவில்லை, பேசியதற்கு எச்சரித்துவிட்டு இருக்கலாம் என்று பேசி இருக்கிறார். இப்படி பாலா பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலா தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். பாலா பயங்கரமாக வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் மோதிக் கொண்டு வருகிறார். இந்த நிலைமையில் பாலா, பப்ஜி பதன் குறித்து பேசி இருப்பது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இவருடைய விளையாட்டிற்கு பங்கம் வருமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full