ஆரி மற்றும் பாலாஜிக்கு ஸ்பெஷல் குறும்படம் போட்ட கமல் - செமையா இருக்கு பாருங்க.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 13 வாரங்களை கடந்து 14 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=0wASY3uKBdQ
கடந்த வாரம் ரியோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் இந்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் அவரை நாமினேட் செய்ய முடியாது என்று பலரும் நினைத்தனர். இறுதி வாரத்தில் ரியோவை கேப்டனாக்கி அவரை இறுதி போட்டிக்கு அனுப்ப விஜய் டிவி திட்டமிட்டுவிட்டது என்று பல விமர்சனங்கள் எழுந்தது. அதே போல இந்த வாரம் நாமினேஷன் கூட நடைபெற்றது. ஆனால், இறுதி வாரம் என்பதால் இந்த முறை அனைவருமே நாமினேட் செய்யப்பட்டு உள்ளதாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.
இதையும் பாருங்க : எதிர்க இருக்கறது எமனா இருந்தாலும் பயப்பட கூடாது - வெளியான விஜய் சேத்துபதியின் ப்ரோமோ.
எனவே, யார் யார் இறுதி போட்டிக்கு செல்வார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் ஷிவானி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.அதே போல இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில் சோம் டிக்கெட் டு பினாலேவை வென்று இருந்ததை காண்பித்தார்கள்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாலாஜி மற்றும் ஆரி பேசிய ஒரு உரையாடலின் குறும்படம் ஒன்றை போட்டுள்ளார் கமல். அதில் இதுநாள் வரை எலியும் பூனையுமாக இருந்த இருவரும் தற்போது ஒரு புரிதலுடன் மாறியுள்ளார்கள். அதனை கமலும் பாராட்டி இருக்கிறார்.