ஆரி - பாலாஜி காலர் டாஸ்க்கில் இதான் நடந்ததா ? ஆரிக்கு எதிராக பாலாஜி செய்யும் இந்த சூழ்ச்சி சரியா ?

By Rajkumar · 1/12/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 57 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறி இருந்தார் மற்ற போட்டியாளர்கள் வெளியேறியது வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது. மற்ற போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்ட விதத்தை விட சம்யுக்தாவை மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

https://twitter.com/indusha21/status/1333660162482003968

சம்யுக்தா வெளியேறியதற்கு முக்கிய காரணம் கடந்த வாரம் நடைபெற்ற கால் சென்டர் டாஸ்க்கில் அவர் 'கலீஜ்' மற்றும் 'வளர்ப்பு' என்ற வார்த்தையை பேசி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கால் சென்டர் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது இதில் கால் சென்டரில் இருக்கும் போட்டியாளர்கள் இடம் கால் செய்யும் போட்டியாளர் எந்த ஒரு கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம் ஆனால் அதற்கு கால் சென்டரில் இருக்கும் போட்டியாளர் பதிலை மட்டும் தான் கொடுக்க வேண்டும் எதிர் கேள்வி கேட்கக் கூடாது.

மேலும், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் கால் சென்டரில் இருக்கும் நபரின் அழைப்பை துண்டிக்க வைக்க வேண்டும். அப்படி துண்டிக்த் தவறினால் அவர்கள் நேரடியாக நாமினேட் ஆவார்கள். இதில் ஏற்கனவே அர்ச்சனா, ரம்யா, சனம், ஆரி, நிஷா ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த டாஸ்கில் கால் சென்டரில் இருக்கும் ஆரிக்கு பாலாஜி கால் செய்து இருந்தார். ஆனால், இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது ஆரி முதலில் போனை வைத்தது போல கட்டப்பட்டது.

https://twitter.com/Yuna_Chillz/status/1333667112628350976

ஆனால், இரண்டவாது ப்ரோமோவோவில், ஆரி பேசுகையில், நான் பதில் சொல்லக் கூடாது அவன் கருத்து மட்டும் வரவேண்டும். அது எனக்கு எதிராக இருக்க வேண்டும் அவ்வளவு தான் என்று கூறி இருந்தார். அதே போல பாலாஜி பேசிக்கொண்டு இருக்கும் போது நிஷா பாலாவிடம் 'கேட்டு இருக்கலாமோ என்பது எங்களின் கருத்து' என்று கூறுகிறார். அதற்கு பாலாஜி, இது தான் கான்சப், பார்வையாளர்களுக்கு ஒரு தெளிவான பார்வை கிடைக்கும் எதனால் கத்திக்கிட்டாங்கனு என்று கூறினார்.

https://twitter.com/avudhayakumar/status/1333660730571177986

ஆரி, நான் பதில் சொல்லக் கூடாது அவன் கருத்து மட்டும் வரவேண்டும். அது எனக்கு எதிராக இருக்க வேண்டும் அவ்வளவு தான் என்று கூறியதை வைத்து பார்க்கும் போது பாலாஜி, கால் செய்த போது ஆரிக்கு எதிராக தன்னுடைய கருத்தை மட்டும் கூறிவிட்டு ஆரியின் விளக்கத்தை கேட்காமல் போனை துண்டித்தது போல தான் இருக்கிறது. இதை தான் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full