விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் சர்ச்சை நாயகனாக வலம்வந்தவர் பாலாஜி. பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை எக்கச்செக்க சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார். உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். அதற்கு சனம் செட்டி ஏன் முடியாது என்று கேட்டார். பின்னர் இந்த பிரச்சனையை விட்டு விட்டு பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சாதனைகளைப் பற்றி கூறி வந்தார்.

இதையும் பாருங்க : ரெக்கார்ட் டான்ஸ் குழுவில் குக்கு வித் கோமாளி புகழ் பவித்ரா போட்ட ஆட்டம் ? வீடியோ இதோ.

Advertisement

இந்த பிரச்சனை குறித்து பாலாஜி குறிப்பிட்ட அந்த beauty pageant நிறுவனத்தில் ஓனர் ஜோ மைக்கேல் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில், பாலாஜி முருகதாஸ், பேசணும்னு பேசி இருக்கார். அவர் பேசியதற்கு அவர் பதில் சொல்லி ஆகணும் இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எங்கள் சார்பில் ஒரு சட்ட நோட்டீஸ் எங்கள் வக்கீல் மூலமாக வழங்கப்படும். அவர் டுபாகூர் என்று சொல்லி இருக்கார். அவர் டுபாகூர் என்று சொன்ன அந்த நிறுவனம் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஒரு pageant நிறுவனம். மேலும், பாலாஜி முருகதாஸ் பங்கேற்ற ஒரே தேசிய pageant என்றால் அது femina நடத்திய Mr.india pageant தான். அதில் கூட இவர் வின்னர் கிடையாது. இவர் பிக் பாஸில் பேசிய போது நான் ஒரு pageant  நிகழ்ச்சியை நடத்தினேன் என்று கூறி இருந்தார்.

மேலும், பாலாஜி மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஒன்று கூறி இருந்த ஜோ மைக்கேல் தற்போது அதனை செய்துள்ளார். அதாவது தன்னுடைய நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் குறித்து தவறாக பேசியதோடு, தன்னுடைய நிறுவனம் ஒரு டுபாக்கூர் நிறுவனம் என்று கூறியது தனக்கு மன உளச்சலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜோ மைக்கேல் பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக கூறி வக்கீல் நோட்டீசை அனுப்பியுள்ளார்.

Advertisement

மேலும், பாலாஜிக்கு அதனை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ள ஜோ மைக்கேல்.பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜோ மைக்கேல் சொன்னதும் பாலாஜி ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். இருப்பினும் பாலாஜி குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வரும் ஜோ மைக்கேல், சமீபத்தில் பாலாஜி தன்னிடம் செல் போனில் பேசியுள்ள ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Advertisement