விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் பல பரிட்சியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் சோம் சேகர், பாலாஜி முருகதாஸ் என்று ரசிகர்களுக்கு பரிட்சமில்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டு உள்ளனர். இதில் மாடல் அழகனான பாலாஜி தேனியில் பிறந்த இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் மாடலிங் மீதிருந்த ஆர்வத்தால், இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கூட கலந்து கொண்டிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.அதே போல இவர் 2017 ஆம் ஆண்டின் பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் Mr. Perfect Body என்ற பட்டத்தை கூட வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாலாஜி ஒருவர் கடந்த ஆண்டு மீனா நடிப்பில் வெளியான மெர்லின் காமாக்ஷி என்ற வெப்சீரிஸ் என்கூட நடித்திருக்கிறார். அதுபோக இவர் ஏற்கனவே ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியாக இருந்த டைசன் என்ற படத்தில் கமிட் ஆனதாக செய்திகள் வெளியானது . அந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2018 ஆண்டில் வெளியானது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸில் கலந்து கொண்டு இருக்கிறார். இவர் அனைவரிடமும் முகத்து நேராக பேசுகிறார் என்று பலர் இவரை விரும்பினாலும், சிலர் இவரது முரட்டு குணத்தை விரும்பவில்லை.

Advertisement

இருப்பினும் இந்த சீசன் கொஞ்சம் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பாலாஜி தான். ஆரம்பத்தில் இருந்தே பாலாஜி அடிக்கடி எதாவது ஒரு சண்டையை கிளப்பிக் கொண்டு தான் வருகிறார். அதிலும் கடந்த சில வாரமாக இவருக்கும் ஆரிக்கும் ஒரு யுத்தமே சென்று கொண்டு தான் இருக்கிறது. என்னதான் பாலாஜி ஒரு புறம் தாட் பூட் என்று கத்திக்கொண்டு இருந்தாலும் மற்றொரு புறம் பாலாஜி ஷிவானியுடன் ரொமான்ஸ் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறார்.

ஆனால், இதுவரை இவர்கள் இருவருமே தங்களுக்குள் இருப்பது காதல் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி ஒரு நிலையில் இன்று பாலாஜி, தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பாலாஜி, 2 டிசம்பர் 1995 ஆம் ஆண்டு தான் பிறந்தார். அதாவது இன்று (2-12-2020) பாலாஜி தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதே போல ஷிவானிக்கு பிறந்தது 2001 தான். அதை வைத்து பார்த்தால் இவர்கள் இருவருக்கும் 6 வயது வித்யாசம்.

Advertisement
Advertisement