சோம் சேகர், பாலாஜி முருகதாஸ் என்று ரசிகர்களுக்கு பரிட்சமில்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டு உள்ளனர். தேனியில் பிறந்த இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் மாடலிங் மீதிருந்த ஆர்வத்தால், இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கூட கலந்து கொண்டிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.அதே போல இவர் 2017 ஆம் ஆண்டின் பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் Mr. Perfect Body என்ற பட்டத்தை கூட வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலாஜி ஒருவர் கடந்த ஆண்டு மீனா நடிப்பில் வெளியான மெர்லின் காமாக்ஷி என்ற வெப்சீரிஸ் என்கூட நடித்திருக்கிறார்

அதுபோக இவர் ஏற்கனவே ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியாக இருந்த டைசன் என்ற படத்தில் கமிட் ஆனதாக செய்திகள் வெளியானது . அந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2018 ஆண்டில் வெளியானது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸில் கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடந்து வந்த பாதை என்ற ஒரு டார்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் கடந்து வந்த கடினமான பாதை குறித்து பேசி இருந்தார்கள். மேலும் இந்த டாஸ் கை வைத்து அடுத்த வாரம் நடைபெற இருக்கும் எழிமினேஷன் கான நாமினேஷன் நடைபெற்று இருந்தது.

Advertisement

அதேபோல் இந்த டாஸ்கின் போது பாலாஜி முருகதாஸ் பேசும் போது, தனது தாய், தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் என்றும், குடித்துவிட்டு அப்பா தன்னை நள்ளிரவில் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். அதே போல சிறு வயதில் தனது உடலை நம்பி தான் தன்னுடைய வாழ்க்கையை துவங்கியதாக கூறி இருந்தார் பாலாஜி முருகதாஸ்.

பாலாஜி முருகதாஸின் ஹைலைட்டே அவரது கட்டுமஸ்தான உடல் அமைப்பு தான். இவரது உடல் அமைப்பை பார்த்து கமல் கூட பாராட்டி இருந்தார். அவ்வளவு ஏன், பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே கூட இவர் உடற்பயிற்சியை செய்ய தவறியதில்லை. மேலும், இவர் தனது உடலை நம்பி தான் தனது வாழ்க்கையை துடங்கினாள் என்று கூட சொல்லி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பாலாஜி முருகதாஸின் பள்ளிபருவ புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் எப்படி இருக்கிறார் என்பது நீங்களே பாருங்க.

Advertisement
Advertisement