செரி விடுங்க நான் கோவப்படல - ஆரி பற்றி கேமரா முன்பு புலம்பும் பாலா.

By ·

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=CyTsLSKYdGo&feature=youtu.be

தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர். இதில் பாலாஜிக்கு ஒரு சிறப்பு பவர் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே போல இதுவரை தூங்கப்படாமல் இருந்த கோல்டன் டிக்கெட் டாஸ்க் நேற்று தான் துவங்கியது. அதே போல இந்த வாரம் பணப்பெட்டி சலுகை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரமான ஆரி மற்றும் பாலாஜி சண்டை தான் பரபரப்பாக சென்றது.

இது ஒருபுறம் கடந்த வாரம் முழுதும் நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில் ஆஜீத், ரியோ, சோம் ஆகிய மூன்று பேர் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கபபட்டனர். இவர்கள் மூவருக்கும் நடைபெற்ற கேப்டன் பதவிக்கான டாஸ்க்கில் ரியோ வெற்றி பெற்று இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எனவே, இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து இருப்பதால் ரியோ நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இறுதி வாரம் என்பதால் அவரும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்.

அதே போல இறுதி வாரம் என்பதால் Ticket To Finale Task கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நேற்றய நிகழ்ச்சியில் இரண்டு டாஸ்க் நிறைவடைந்த நிலையில் பாலா மற்றும் ஆரி இருவருமே சமமான புள்ளிகளில் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் Ticket To Finale வின் அடுத்தகட்ட டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதில் ஏற்கனவே ஆரி மற்றும் பாலாஜிக்கு சண்டை ஏற்பட்டு இருந்தது .

Tamil Behind Talkies AMP · Quick view
View full