தந்தையின் இறப்பிற்கு பின்னர் பாலாஜி முருகதாஸ் முதல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவால் காலமாகி இருந்தார். தந்தையின் இறுதி சடங்கில் பாலாஜி கண்ணீரோடு இருக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது . மேலும், தந்தையின் இறப்பை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி ‘இதுவும் கடந்து போகும்’ என்று பதிவிட்டு இருந்தார். பாலாஜி தந்தை இறப்பிற்கு பலரும் சமூக வலைதளத்தில் ஆறுதல் கூறி வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் தந்தையின் இறப்பிற்கு பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவு ஒன்றை போட்டுள்ளார் பாலாஜி. அதில் பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது பெண் ரசிகைகள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை போட்டு ‘வாழ்கைல எவ்ளோ பிரச்சனை வந்தாலும் யார் என்ன சொன்னாலும். ஒரே ஒரு தீர்வு இருக்கிறது ‘சரி வச்சிக்கோங்க’ சொல்லிட்டு போயிட்டே இருக்கனும்’ உங்கள் அன்பிற்கு நன்றி நான் நலமுடன் இருக்கிறேன்.

Advertisement
Advertisement