Bigg Boss Tamil : சார் உங்க படத்துல சின்ன பையனா நடிச்சேன், பாலாஜி சொன்ன விஷயத்தால் சர்ப்ரைஸ் ஆன சிம்பு - எந்த படம் தெரியுமா ? இதோ வீடியோ.

By Arun · 27/2/2022

தென்னிந்திய சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக வலம் வருகிறார். இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. நடுவில் சிம்புவின் சில படங்கள் தோல்வி அடைந்து இருந்தாலும் செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படம் பல தடைகளை கடந்து வெளியாகி இருந்தது. மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். படத்தில் சிம்பு வேற லெவல் மிரட்டி இருக்கிறார். அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இதனை தொடர்ந்து சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிம்பு அவர்கள் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.
கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமலஹாசன் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு களமிறங்கி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளார்கள்.

https://www.youtube.com/watch?v=DeEg0Ku5X9I

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிம்பு:

அதுமட்டும் இல்லாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் பலரும் சிம்புவுக்கு ஏதோ ஒரு வகையில் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் சிம்புவுடன் தொடர்புடைய அனுபவத்தை பகிர்ந்து இருந்தார்கள். அந்த வகையில் பாலாஜி முருகதாஸும் சிம்பு உடன் தொடர்புடைய அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அது என்னவென்றால், பாலாஜி முருகதாஸ் சிம்புவுடன் வல்லவன் என்ற படத்தில் நடித்து உள்ளாராம். 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சிலம்பரசன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வல்லவன்.

வல்லவன் படத்தில் பாலாஜி முருகதாஸ்:

இந்த படத்தில் சிம்பு, நயன்தாரா, ரீமாசென், சந்தியா, சந்தானம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதே போல் இந்த படத்தில் இடம்பெற்ற முதல் பாடலில் சிம்புவின் கையை பிடித்து குழந்தைகள் நடனம் ஆடி இருப்பார்கள். அந்த சிறுவயது பிள்ளைகளில் ஒருவராக பாலாஜியும் இருந்திருக்கிறார். இந்நிலையில் இது குறித்து தான் பாலாஜி நிகழ்ச்சியில் சிம்புவிடம் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், நீங்கள் வல்லவன் படத்தில் கருப்பு நிற ஆடையில் செம மாஸாக வந்திருப்பீர்கள்.

சிம்பு பற்றி பாலாஜி முருகதாஸ் சொன்னது:

அந்த முதல் பாடலில் நான் உங்களுக்கு பின்னாடி இருந்தேன். அப்போது இருந்தே நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்று சொல்கிறார். உடனே சிம்பு, இப்படி எல்லாம் சொல்லாதப்பா, நீ சின்ன வயது என்று சொல்வதைப் பார்த்தால் எனக்கு என்ன வயது அதிகமாகி விட்டதா! என்று கிண்டலாக சிம்பு பேசுகிறார். இப்படி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பல போட்டியாளர்கள் சிம்புவிற்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும், இன்றைய நிகழ்ச்சியும் கலகலப்பாக சூப்பராக முடிந்திருக்கிறது. சிம்புவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full