பொழுதுபோக்குல அரசியல கலந்தா இதான் நடக்கும் - பாலாஜி போட்ட பதிவு. விக்ரமனை சொல்றாரோ ?

By Siva · 11/12/2022

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பாலாஜி முருகதாஸ் பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 62 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

https://twitter.com/Kameshw07159579/status/1601841169230573568

மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது.

விக்ரமன் குறித்த தகவல்:

அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து விக்ரமனுக்கு அதிக ஆதரவு ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.

https://twitter.com/Packia25882832/status/1601850308635889664

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன்:

இவர் எந்த ப்ரச்சனை என்றாலும் ஓரம் நிற்காமல் வாதம் செய்து வருகிறார். இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இவர் நடிகர் ஆரி போல் முயற்சி செய்வதாகவும் சிலர் கூறி வருகின்றனர். அதே சமயம் இவர் சேப் ஆகவும் விளையாடிக் கொண்டிருக்கிறார். மேலும், இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் அரசியல் செய்கிறார் என்று எல்லாம் கூறி இருந்தார்கள். அதோடு இவர் நிகழ்ச்சியில் அரசியல் பற்றி எல்லாம் பேசி இருந்தார்.

https://twitter.com/SiRaJiNMuNiR/status/1601823296613281794

பாலாஜி முருகதாஸ் டீவ்ட்:

இதை நெட்டிசன்கள் விமர்சித்திருந்தார்கள். இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, ஒரு என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியில் அரசியல் செய்யக்கூடாது. இது சாதாரண போட்டியாளர்களையும் பாதிக்கும் என்று பாலாஜி முருகதாஸ் ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். இதனை விக்ரமனை குறிப்பிட்டே பாலாஜி முருகதாஸ் போட்டு இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full