ஒரு குழந்தை இருக்குது நெனப்பு இருக்கட்டும் - இளைஞருடன் நித்யா பதிவிட்ட வீடியோவால் கடுப்பான ரசிகர். அதற்கு அவரின் பதிலடியை பாருங்க.

By Rajkumar · 14/6/2021

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை ஊருக்கே தெரிந்தது. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி தான் நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது. பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்துகொண்டிருந்தது. இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் தான் தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். பிக் பாஸ் சீசன் இறுதியில் கமலஹாசன் முன்னிலையில் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். தற்போது நித்யா மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் எல்லாம் மூடப்பட்ட நிலையில் கொஞ்சம் சிரமப்பட்டு தான் வருகிறார்.

ஏற்கனவே நித்யா ஐடி துறையில் ஒரு பெரிய கம்பெனியில் பணிபுரிந்தவர். அதற்கு பிறகு ஒரு பிரபலமான மருத்துவமனையில் எச்.ஆர்.அதிகாரியாக இருந்தவர். பாலாஜியை கல்யாணம் செய்த பிறகு தான் அந்த வேலையிலிருந்து விலகி விட்டார். கணவரை விட்டு பிரிந்தாலும் தன்னுடைய சொந்தக் காலில் நின்று தன் குழந்தையை காப்பாற்றி வருகிறார் நித்யா.

அதே போல இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது பெயரை தேஜு என்றும் மாற்றிக்கொண்டார். பெயரை மட்டும் மாற்றிக்கொள்ளாமல் ஆளே மாறியுள்ளார். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நபருடன் டூயட் ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதற்கு ரசிகர் ஒருவர், உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்குது நெனப்பு இருக்கட்டும் என்று கூறி இருந்தார். அதற்கு நித்யா குறைக்கும் நாய் கொறைக்கட்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full