Ticket To Finale டாஸ்கில் மாயாக்கு கொடுத்த Boardல் இருந்த வித்யாசம். பிக் பாஸ் போட்ட திட்டத்தை வெளிச்சம் போட்டு கட்டிய தினேஷ.

By ·

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 89 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

https://twitter.com/HZM_FAZN/status/1740970312873996734

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபரை தேர்வு செய்து TTF போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். அந்த வகையில் அனைவருமே சேர்ந்து அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தார்கள்.

பிக் பாஸ் 7:

கடந்த சில தினங்களுக்கு முன்னர் Ticket To Finaleவின் முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் இறுதியாக விஷ்ணு வென்று மூன்று புள்ளிகளை பெற்றார். இரண்டாம் டாஸ்கில் நிக்சன் முதல் இடத்தையும், பூர்ணிமா இரண்டாம் இடத்தையும் பிடித்து இருந்தார்கள். ஆனால், அதில் நிக்சன் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. பின் மூன்றாவது Ticket To Finale டாஸ்க் துவங்கி இருக்கிறது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் நேருக்கு நேர் அமர்ந்து தங்கள் கருத்துகளை கூறி வெல்வது போல வடிவைமைக்கப்ட்டு இருக்கிறது.

https://twitter.com/Guest_account9/status/1740886721062150313

Ticket To Finale டாஸ்க்:

இந்த டாஸ்கில் வெல்பவர்களுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பின் விஷ்ணு 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பூர்ணமா மற்றும் நிக்சன் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். மேலும், நேற்று டிக்கெட் டு பினாலேவின் கடைசி டாஸ்க் நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் போர்டை கையில் தாக்குப்பிடித்து நிற்க வேண்டும். அதில் யார் கடைசி வரை இருக்கிறார்களோ? அவர்கள் தான் வெற்றியாளர் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து பலகையின் மீது கை வைத்திருந்தார்கள். அதில் விஷ்ணு மூன்று மதிப்பெண்களை பெற்றிருந்தார். ஏற்கனவே அவர் 7 புள்ளிகளை வைத்திருந்தார். மொத்தம் டாஸ்க் வெற்றிக்கு தேவையான 10 புள்ளிகளை பெற்று இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கின் வெற்றியாளர் ஆனார் விஷ்ணு. அதேபோல் பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் சீக்கிரமாகவே கையெடுத்து தோற்று விட்டார்கள். பின் தினேஷ், இந்த இரண்டு பலகையும் சோதித்து பார்த்திருக்கிறார். அப்போது பூர்ணிமா பக்கம் இருந்த பலகை ரொம்ப ஆடாமல் ஸ்ட்ராங்கா இருந்தது.

https://twitter.com/HarishKuma53838/status/1740952125411377623

அதே விஷ்ணு பிடித்திருந்த பலகை ஆடிக்கொண்டு இருந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ தான் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், ஒரு வேளை பூர்ணிமா இந்த டாஸ்க்கில் அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தால் அவர் தான் வெற்றியாளராக இருப்பார். அதிர்ஷ்டவசமாக விஷ்ணு வெற்றி பெற்றிருக்கிறார். ஏற்கனவே இந்த வாரம் நடந்த நாமினேஷன் பட்டியலில் மாயாவுக்கு பிக் பாஸ் பேவரிசம் செய்து இருந்தது. பொதுவாக நாமினேட் பட்டியல் எப்போதுமே அல்பாபெட்டிக் ஆர்டரில் தான் இருக்கும். ஆனால், இந்த முறை மாயாவின் பெயர் முதல் இடத்தில் இருக்கிறது. இப்படி பிக் பாஸ் சில போட்டியாளர்களுக்கு பேவரிசம் செய்து வருவதாக நெட்டிசன்கள் கன்னடம் தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full