கமல் கூறியதால் சோகத்தில் ஆழ்ந்த கவிலியா.! தர்ஷனிடம் புறம் பேசும் சேரப்பா.!

By Rajkumar · 1/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரமாக ரணகளமாக சென்றாலும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் குது குளமாக தான் போய் கொண்டு இருக்கிறது. சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் ரொமான்ஸுக்கு தற்போது யாரும் தடை போட ஆளில்லலை என்று ரொமான்ஸை அள்ளி வீசி வருகின்றனர்.

https://twitter.com/vijaytelevision/status/1168078539737817088

தற்போது லாஸ்லியாவும் கவின் மீது அதிக ஈர்ப்பில் தான் இருந்து வருகிறார். கவின் மற்றும் லாஸ்லியா இரவு நேரத்தில் தனியாக பேசுவதை சாண்டி கூட கண்டித்தார். ஆனால், இவர்கள் இருவரும் யார் பேச்சையும் கேப்பதாகவும் இல்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

அதே போல பகல் முழுவதும் ஒன்றாகவே இருக்கும் இவர்கள் இரவானால் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டும் இருக்கின்றனர். அதே போல கடந்த 2 வாரமாக கவின் மற்றும் லாஸ்லியாவை கமல் கொஞ்சம் வறுத்து எடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று வெளியான இரண்டாவதுப்ரோமோவில் லாஸ்லியாவிற்கு சில அறிவுரைகளை வழங்குகிறார் கமல். அதில் உங்களுக்கு ஒருவர் கையை பிடிக்க வேண்டுமென்றால் என்னை பின் தொடருங்கள் என்று மக்கள் நீதி மையத்தின் சின்னத்தை லாஸ்லியாவிடம் மறைமுகமாக கூறினார் கமல்.

கமல் அப்படி கூறியதால் கவின் மற்றும் லாஸ்லியா கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது போல தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தெரிகிறது. இதனால் சேரன் இவர்கள் தர்ஷனிடன் கார்டன் ஏரியாவில் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார்.



Tamil Behind Talkies AMP · Quick view
View full