இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பல வன்னிய சமூகத்தினர் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வந்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி கலசம் படம் காட்டப்பட்டது.

இது பல வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தவாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது. இதனால் படத்தில் அந்த அக்னி கலசம் நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்தில் உண்மையான செங்கேணி பார்வதிக்கு நியாயம் கிடைக்க போராடிய வன்னியரின் பெருமையை சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மேலும், சூர்யாவிற்கு எதிராக பல வன்னிய அமைப்புகள் புகார் அளித்து வருகிறது.

Advertisement

அந்தவகையில் பழங்குடியின மக்களுக்காக போராடிய கோவிந்தனும் ஒரு வன்னியர் தான் என்று ஒரு சிலர் சோசியல் மீடியாவில் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பார்வதி ராஜகண்ணுக்காக போராடியவர்களில் கோவிந்தனும் ஒருவர். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். இந்த நிலையில் தான் வன்னியர் அல்ல ஒரு கம்யூனிஸ்ட். எனவே, எனக்கு ஜாதி அடையாளம் கொடுக்க வேண்டாம் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பதிவிட்டுள்ள சேரன், இதான் உண்மையான கெத்து.. சிவப்பு சிந்தனைக்காரனுக்கெல்லாம் ஜாதி என்பது இல்லை.. ஜாதி பார்த்தும் இயங்குவது இல்லை.. எங்க ஊர்ல ராமலிங்கம் அய்யான்னு ஒரு கம்யூனிஸ்ட் இருந்தார்.. அவரும் இதையேதான் சொன்னார்.. செய்தார்.. மனிதனுக்கு மனிதன் உதவ அவனுக்காக போராட ஜாதி தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு ட்விட்டர் வாசி ஒருவர் ‘அப்போ நீங்கள் காலண்டர் காட்சி சரின்னு சொல்றீங்களா’ என்று கேள்வி எழுப்பினார்.

Advertisement

இதற்கு பதில் அளித்த சேரன், இல்லை அது உண்மையல்ல, என்னோட முந்தைய பதிவுல அதை தெளிவா சொல்லிருக்கேன்.. அது தெரியாம இங்க வந்து நம்ம மக்கள் எனக்கு சூப்பரா வசவு பாடிட்டு போறாங்க… ஹாஹா.. அவர்கள் அறியாமையை நினைத்து சிரிக்கவே செய்கிறேன்… என்னோட முந்தைய பதிவுகளை பாருங்க.. என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement