பேத்தி வயது பிள்ளையுடன் ஆடுறாரு.! ரஜினியை தாக்கி தனது படத்தில் வசனம் பேசியுள்ள சேரன்.!

By Rajkumar · 4/10/2019

சேரன் அவர்கள் தென்னிந்தியா தமிழ் திரைப்படத் துறையில் பல சாதனைகளை புரிந்து உள்ளார். இவர் தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும்,தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய மூன்று திரைப்படங்கள் தேசிய விருதையும் பெற்றுள்ளது .அது வெற்றிகொடிகட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்கள் தான் . மேலும், இவர் சினிமா துறையில் பல படங்களை இயக்கியும் அதிலே நடித்தும் கூட உள்ளார்.சேரன் அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக வேலை புரிந்தவர். தாயார் பள்ளி ஆசிரியை ஆவார். இவருக்கு சிறு வயதிலேயே நாடகங்கள் நடிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்.

https://www.facebook.com/memeztamizhan/videos/699211030489513/?v=699211030489513

மேலும்,2011ம் ஆண்டு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திரைப்படங்களில் வாழ்க்கையை தொடர சென்னைக்கு வந்தார் ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார்.பின் இயக்குனராகவும் பணியாற்றினார்.இவர் நாட்டுப்புற மக்களின் அடிப்படை வாழ்க்கையை எடுத்துக் கூறுவதிலும் வல்லவர். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சில ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக சேரன் பங்கு பெற்றார். மேலும், தன்னுடைய விடாமுயற்சியாலும் நம்பிக்கையாளும் 90 நாட்கள் அந்த வீட்டில் இருந்து வந்தார். இதுவரை அந்த பிக்பாஸ் வீட்டில் வயது அதிகம் உள்ள போட்டியாளர்கள் இவ்வளவு நாட்கள் இருந்ததில்லை என்ற ரெக்காடை முறியடித்து விட்டார்.

மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சேரன் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சேரனுக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது என்று கூட சொல்லலாம். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சேரன் தற்போது விஜய் சேதுபதியை வைத்து விரைவில் படம் இயக்கவும் உள்ளார். இந்த நிலையில் சேரன் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த காட்சியில் நடிகரை நடிகராக மட்டும் பார்க்க வேண்டும் என்றும் மேலும், 5 வயதில் நான் படம் பார்த்த போது அறியா பெண்ணுடன் ஆடிக்கொண்டு இருந்தார் . தற்போது இதே தலைவர் தான் அந்த பெண்ணோடு ஆடுகிறார். முதலில் நமக்கு அறிவுரை சொல்லும் அவர் தமிழரா என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், சூப்பர் ஸ்டார் என்றும் பாராமல் ரஜினியை தாக்கி அப்போது இவ்வளவு தைரியமாக சேரன் பேசியுள்ளார் என்று பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க சேரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ள புதிய படத்தின் பணிகளை செய்து கொண்டுள்ளார் இயக்குனர் சேரன். விஜய் சேதுபதியின் புதிய படத்தின் குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார். இதனால் இது விரைவில் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் .

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full