பிக் பாஸ் பிரபலத்தை சந்திப்பதற்காக சென்னை வந்த விஜய் சாரதி. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

By Rajkumar · 10/2/2020

வணக்கம் இந்த வாரம் ஊட்டியிலிருந்து, இந்த வாரம் மதுரையிலிருந்து,இந்த வாரம் கோயம்புத்தூரிலிருந்து என்ற இந்த வார்த்தைகளை கண்டிப்பாக 90ஸ் கிட்ஸ்கள் தற்போதும் மறந்திருக்க மாட்டார்கள். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் 90 கிட்ஸ் மத்தியில் இன்றும் மனதிலிருந்து நீங்காமல் தான் இருக்கும். அந்த வகையில் நீங்கள் கேட்ட பாடல் என்று நிகழ்ச்சியும் ஒன்று. ஒரு காலத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்ச்சியை வித்யாசமான முறையிலும் சுவாரசியமான முறையிலும் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் விஜய் சாரதி.

ஊர் ஊராக சென்று அந்த ஊரில் என்ன சிறப்பு என்பதை கூறுவார். மேலும், அங்கு இருக்கும் ஊர் மக்களுடனும், அந்த ஊருக்கு வரும் சுற்றுல்லா பயணிகளுடனும் உரையாடி பின்னர் அவர்களுக்கு பிடித்த பாடல்களை ஒளிபரப்புவார்கள். தற்போது வேண்டுமானால் 'இது என்ன புதுசான விஷயமா' என்று கேட்கலாம். ஆனால். 90 ஸ் கிட்ஸ்களுக்கு தான் இந்த நிகழ்ச்சியின் அருமையே தெரியும் என்று சொன்னாலும் அதற்கு நிகரில்லை.

இதையும் பாருங்க : விஜய்க்கு பின் அதிக ரசிகர் குடும்பம் கொண்டது சிவகார்த்திகேயன் தான் என்று கூறிய பிரபல நடிகர்.

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சாரதி ஒரு படித்து முடித்த பட்டதாரி ஆவார். படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதன் பின்னர் யதேச்சையாக சன் டிவியில் ஒரு ஆடிசனில் கலந்துகொண்டு செலக்ட் ஆனார். அதன் பின்னர் வந்ததது தான் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய பிரபலம் ஆனார் விஜய் சாரதி. விஜய், அஜித், ரஜினி, கமல் என பலரையும் பேட்டி கண்டுள்ளார் விஜய் சாரதி.

https://www.instagram.com/p/B8WONRrBzw5/

கடந்த சில ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்று எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் விஜயசாரதி பிரபல இயக்குனரும் நடிகருமான சேரனை சந்திக்க சென்னைக்கு வந்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சேரன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விஜய்சாரதி தற்போது இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறாராம். அதனை சேரன் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full