ஆரியின் நேர்மை, பாலாஜியின் உண்மை முகம் - வெற்றிபெற்றவர்கள் குறித்து சேரன் கருத்து.

By Rajkumar · 18/1/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நேற்றோடு ஜனவரி 17) நிறைவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

https://twitter.com/directorcheran/status/1350989353691000832

அதே போல இறுதி போட்டிக்கு ஒரு சில நாள் மட்டுமே இருந்த நிலையில் கேப்ரில்லா 5 லட்சத்தை எடுத்துகொன்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் இருந்த நிலையில் ரம்யா மற்றும் சோம் வெளியேற்றப்பட்டனர். இறுதியில் ரியோ மூன்றாம் இடத்தையும் பாலாஜி இரண்டாம் இடத்தையும் ஆரி முதல் இடத்தையும் பிடித்தார். ஆரிக்கு பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸுக்கு பின் ஆரி பதிவிட்ட முதல் பதிவு - இதான் அவருடைய தங்கமான மனசு.

இப்படி ஒரு நிலையில் இயக்குனர் மற்றும் நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சேரன் முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு இரண்டாம் இடத்தை பிடித்த ரியோவிற்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். ஆரி குறித்து பதிவிட்டுள்ள சேரன், ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்பப்பிள்ளைகளின் வெற்றி. ஒவ்வொரு சமூகப்பொறுப்பாளனின், நேர்மையான மனிதர்களின் வெற்றி. உங்களின் வெற்றியால் ஒவ்வொரு கடின உழைப்பாளியும் பெருமை கொள்கிறான்.. வாழ்த்துக்கள் ஆரி அர்ஜுனன் என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/directorcheran/status/1350985593665286144

அதே போல பாலாஜிக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ள சேரன், BBல் runner ஆக வெற்றிபெற்று இரண்டாம் இடத்தை பெற்ற பாலாஜியின் உண்மைமுகமும் எதையும் சுலபமாக கடந்துசென்று தன்னை மாற்றிக்கொள்ளும் குணமும் கவர்ந்தது.. கண்டிப்பாக பக்குவப்படப்பட வாழ்க்கையில் உயர்வார்.. வாழ்த்துக்கள் பாலாஜி என்றும் பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full