ஜெப்ரி வளரணும்ன்னு ரொம்ப ஆசை, ரஞ்சித் அண்ணா காமெடி - நிகழ்ச்சிக்கு பின் சத்யா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சத்யா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 79 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் கொடுத்த டாஸ்கில் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. சிகிச்சைக்கு பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார். இதை அடுத்து கேப்டன்சி டாஸ்க்கில் முத்துக்குமரன், பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்திருந்தார். இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்து இருந்தார். இதனால் முத்துக்குமரன் மனமுடைந்து மன்னிப்பு கேட்டும் பிக் பாஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.
சத்யா பேட்டி:
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சத்யா அளித்த பேட்டியில், முத்துக்குமரன், சத்யாவிற்கு நல்ல மனசு. அதனால்தான் ஜெஃப்ரி, சத்யாவை விட்டுட்டு கோவா கேங் போனாலும் இந்த விஷயத்தை நினைத்து சத்யா ஜெஃப்ரியிடம் கோபப்படவில்லை. ஆனால், அந்த நல்ல மனசு இந்த விளையாட்டுக்கு சரிப்பட்டு வராது என்று நான் வெளியில் வருவதற்கு முந்தைய நாள் தான் சொல்லியிருந்தார். எனக்கு நல்ல மனசு என்று சொல்லி எனக்கு டப்பா அடிச்சுக்க நான் விரும்பவில்லை. எனக்கு ஜெஃப்ரி வளரணும் என்பது ரொம்ப ஆசை.
எனக்கும் அவனுக்கும் நல்ல கனெக்சன் இருக்கு. நான் அவனுக்கு நாமினேஷன் பாஸ் கொடுத்த சமயத்தில் கூட இதே விஷயத்தை தான் சொன்னேன். எனக்கு ஜெஃப்ரி மேல கோபம் வராது. காரணம், எங்களுக்கு இடையில் இருக்கிற ஒரு புரிதல் தான்.
https://www.youtube.com/watch?v=T4oe3Q26SXU
போட்டியாளர்கள் பற்றி சொன்னது:
இந்த மாதிரியான விஷயத்தை பொசசிவ்னு சொல்லுவார்கள். என்னை பொருத்தவரைக்கும் பொசசிவ் என்பது விட்டுக் கொடுக்கிறதுதான். ரஞ்சித் அண்ணா வேற மாறி. தீபக் அண்ணனுக்கும் அருணுக்கும் ஒரு சண்டை வந்தது. அப்போது கூட ரஞ்சித் அண்ணா சைட்ல நின்னுட்டு கும்பிட்டுயிருந்தார். அதே மாதிரி கடந்த வாரம் நடந்த செங்கல் டாஸ்கில் அப்படிதான் பண்ணார். அந்த விஷயத்தை பார்க்கும்போது காமெடியாக தான் இருந்தது. ஜாலியான விஷயங்களை ரஞ்சித் அண்ணா பண்றது வேற மாதிரி ஒரு என்டர்டைனர். என்னுடைய மனைவி ரம்யா ஏற்கனவே பிக் பாஸில் இருந்தாங்க. பிக் பாஸ் வீட்டுக்குள் போகும்போது சாப்பாடுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இது ஒரு மைன் கேம். இதற்கு முன்னாடி போனவங்க பேசுவது எல்லாம் கேளு என்று சொன்னார். ஆனால், நான் கேட்கவில்லை.
அன்ஷிதா அம்மா செய்தது:
பிக்பாஸ் வீட்டுக்குள் போறதுக்கு பிறகு தான் இதுக்கெல்லாம் தயாராகி வரணும் என்று புரிந்தது. நான் ரெண்டு முறை கேப்டன் ஆகியிருந்தேன். பெரிதாக என்னால் பண்ண முடியாததற்கு காரணம் என்னுடைய தவறுகள் தான். முடிவு எடுக்குற நிலை வரும்போது அந்த இடத்தில் நான் ரொம்ப அதிகமாக யோசித்தேன். அதுதான் எனக்கு பிரச்சனையாக அமைந்தது. நான் வெளியில் வந்த பிறகு அன்சித்தாவுடைய அம்மா, எனக்கு போன் பண்ணினார்கள். அன்ஷிதா என்னுடைய தங்கை. வீட்டுக்குள் என்னை அண்ணா என்று தான் கூப்பிட்டார். அதே மாதிரி தர்ஷா குப்தா அம்மாவும் போன் பேசினார். அவர், நான் ரொம்ப நேர்மையாக விளையாடி இருந்ததாகவும், என்னோட காஸ்டியூம் பிடித்திருந்தது என்றும் சொன்னார்கள் என்று பல விஷயங்களை கூறி இருக்கிறார்.