பார்க்கிங் பட பாணியில் நடந்த விபரீதம் - பிக் பாஸ் தர்ஷன் மீது போலீசில் புகார் அளித்த நீதிபதி மகன் - முழு விவரம் இதோ
பிக் பாஸ் தர்ஷன் மீது போலீசில் புகார் அளித்து இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தர்ஷன். இந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் இவர் தமிழக ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து இருந்தார். இதில் இவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் பெரியளவு வெற்றி பெறவில்லை.
இதை அடுத்து இவர் ஐத்தலக்கா, காடு, யாத்திரீகன் போன்ற படங்களில் எல்லாம் நடித்து இருக்கிறார். இருந்தாலுமே அவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. கடைசியாக இவர்
நடிப்பில் வெளிவந்த படம் நாடு. இந்த படத்தில் மகிமா நம்பியார் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர்களுடன் சிங்கம் புலி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
பிக் பாஸ் மீது புகார்:
இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் தர்ஷன் மீது நீதிபதி மகன் போலீசில் புகார் அளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார் தர்ஷன். இவருடைய வீட்டிற்கு முன்பு நீதிபதியின் மகன் காரை நிறுத்தி இருந்ததால் கோபத்தில் தர்ஷன் கேள்வி கேட்டு இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு கை கலப்பு ஆகி இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=623A0JE7K6A
பார்க்கிங் விவகாரம்:
இதனால் நீதிபதியின் மகன், அவருடைய மனைவி, மாமியாரை தாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து நீதிபதியின் மகன் அவருடைய மனைவி மாமியார் ஆகியோரை தாக்கியதால் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. தற்போது தர்ஷனை ஜே ஜே நகர் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தர்ஷன் சொன்னது, என் வீட்டின் முன் நீதிபதி மகன் கார் நிறுத்தி வைத்து இருந்தார். இதனால் நான் ரோட்டிலேயே 20 நிமிடங்களுக்கு மேல் நின்று இருந்தேன். வீட்டிற்கு என் உறவினர்கள் வந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன். ஆனால், என் வீட்டுக்கு யாரும் வரவில்லை.
தர்ஷன் கைது:
அதற்குப் பின் வந்த அந்த காரின் உரிமையாளர், நீ பிக் பாஸ் போன பெரிய ஆளா? உன்னால் கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா? என்று சொன்னார். பின் என் தம்பியின் மீது சூடான டீயை ஊற்றினான். இதைப் பற்றி கேட்டதற்கு நான் ஜட்ஜ் பையனடா, உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டு என்னுடைய தம்பி மீது அமர்ந்து அவரை தாக்க முயற்சித்து இருக்கிறார். அதோடு நான் எதுவும் பேசவில்லை. ஆனால், அவருடைய மனைவி, மாமியார் எல்லோருமே எங்களை சேர்ந்து தாக்கி இருக்கிறார்கள். இது இங்கிருக்கும் அனைவருக்குமே தெரியும்.
தர்ஷன் பேட்டி:
இவர்கள் இந்த பிரச்சனையை இதோடு விடாமல் என் அக்காவை அழைத்து அவரை ரொம்ப அசிங்கமாக பேசி இருக்கிறார்கள். பின் நீதிபதியின் பையன் போலீசில் எங்கள் மீது புகார் கொடுத்து இருக்கிறார். பதிலுக்கு நான் 100க்கு போன் செய்தேன். ஆனால், அவர்கள் சரியான ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. ஒரு பிரச்சனை முடிந்தால் அத்தனை பிரச்சினை வருகிறது. எத்தனை பிரச்சனைகளை சமாளிப்பது என்று வேதனையுடன் அழுத்திருக்கிறார். மேலும் , இந்த சண்டையில் ஜட்ஜ் பையனையும், மனைவி மாமியாரை எல்லாம் தர்ஷன் மற்றும் அவருடைய நண்பர் தாக்கி தாக்கியதாக சொல்லி போலீசில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.