ஒரு போஸ்ட்டும் இல்லை, Hotstar liveவும் இல்லை - Secret Roomல் வைக்கப்பட்டு இருக்கிறாரா தானா ? Hotstar போட்ட பதிவால் ரசிகர்கள் குழப்பம்.

By Rajkumar · 28/12/2022

பிக் பாஸில் இருந்து வெளியேறி இத்தனை நாட்கள் ஆன நிலையில் தனலட்சுமியின் Live வீடியோவை மட்டும் இன்னும் டிஸ்னி ஹாட்ஸ்டார் வெளியிடவில்லை. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 79 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது 9 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அமுதவாணன் மற்றும் Adkவை தவிர அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, தனலட்சுமி, ரச்சித்தா, கதிரவன் ஆகிய 7 பேர் நாமிநெட் ஆகி இருந்தனர். இதில் கதிர், ரச்சிதா அல்லது மைனா நந்தினி தான் வெளியேறுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் வகையில் தனலட்சுமி வெளியேறி இருந்தார்.

இந்த சீசனில் ஒரு சாதாரண பெண்ணாக அறிமுகமான தனலட்சுமி டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார்.

தனலட்சுமி என்னதான் வெறுப்பை சம்பதித்தாலும் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருப்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பிக் பாஸ் வீட்டில் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் கதிர், ரச்சிதா, எப்போதும் புறம் பேசிக்கொண்டு இருக்கும் Adk, காமெடி என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் Cringe பெயரை எடுத்த மைனா போன்றவர்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தனலட்சுமி வெளியேறியது தான் ஆச்சரியமே.

என்னதான் தனலட்சுமி அடிக்கடி வாயை விட்டு சர்ச்சையில் சிக்கினாலும், டாஸ்க்கிலும் சரி கண்டன்ட் கொடுத்ததில் சரி, தனலட்சுமி மேலே குறிப்பிட்ட போட்டியாளர்களை விட பல படி மேல் தான். பொதுவாக பிக் பாஸில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களை அவர்கள் வெளியேறிய அடுத்த நாளே லைவில் பேட்டி எடுத்து ஹாட் ஸ்டார் வெளியிடும். ஆனால், தனலட்சுமி வெளியேறி இத்தனை நாட்கள் ஆகியும் அவரது லைவ் மட்டும் இன்னும் வரவில்லை.

இப்படி ஒரு நிலையில் இதற்கு விளக்கம் அளித்திருக்கும் டிஸ்னி ஹாட் ஸ்டார் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனலட்சுமி உடன் லைவ் செல்ல முடியவில்லை என்று விளக்கம் அளித்து இருக்கிறது. ஏற்கனவே தனலட்சுமி வெளியேற்றம் Unfair என்று ரசிகர்கள் பலரும் கூறியவர்க்கும் நிலையில் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரின் இந்த விளக்கமும் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு தள்ளி இருக்கிறது. மேலும், பிக் பாஸில் இருந்து வெளியேறிய தனலட்சுமி இது வரை எந்த ஒரு வீடியோவையும் வெளியிடவில்லை. இதனால் அவர் ஒருவேளை Secret Roomல் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று ரசிகர்கள் பலர் கமண்ட் செய்து வருகின்றனர். ஆனால், தனலட்சுமி ஒரு பேட்டியில் பங்கேற்று இருக்கிறார் அது விரைவில் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பித்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full