ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியை உணர்த்தும் வகையில் தனலட்சுமி நடித்துள்ள Album. இதோ வீடியோ.

By Rajkumar · 11/11/2022

பிக் பாஸ் சீசன்6 ஆரம்பித்து கிட்டத்தட்ட 1 மாதம் ஆனா நிலையில் சண்டையும் சச்சரவும் மிகுந்து காணப்படுகிறது. எல்லா போட்டியாளர்களும் கவனமாக தங்களில் கருத்துக்களை கூறி விளையாடி வருகின்றனர் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, விஜே மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டனர் கடைசியாக நடிகை மற்றும் தொகுப்பாளரான மைனா நந்தினி கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை போட்டியாளர்கள் எவ்வளவு மக்களின் கவனத்தை ஈர்க்கின்றனரோ அந்த அளவிற்கு தான் அவர்கள் பிக் பாஸ் விட்டிருக்கும் இருப்பார்களா மாட்டார்களா என்று முடிவாகும். அதிலும் தற்போது போட்டியாளர்களுக்கிடையே பெரிய பிரச்சனைகளும் கருத்து வேறுபாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் நன்றாக வியாடிவந்த ஜி.பி.முத்து வெளியேற. அடுத்து குறைந்த வாக்குகள் மட்டுமே பெற்று மெட்டிஒலி சாந்தி வெளியேறினார். இதனை தொடர்ந்து பெண் போட்டியார்களிடத்தில் குறும்புகள் செய்த அசல் கோளாறு வெளியேறி. கடைசியாக செரீனா வெளியேறினார்.

இப்படி ஒவ்வொருவராக வெளியேறுவதால் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மிக கவனமாக விளையாடி வருகின்றனர். அதிலும் முதலில் அதிகமாக பேசிய அசீம் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹசன் கண்டித்ததும் அடங்கி விட்டார். ஆனால் முதல் வாரத்திலேயே கெட்டப்பேர் வாங்கிய தனலட்சிமி மற்ற போட்டியாளராலுடன் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் கூட செரீனாவை கீழே தள்ளிய குறும்படத்தில் இவருக்கு சாதகமாக இருந்தது அதே நேரத்தில் கமலஹாசனும் இவரை பாராட்டினார்.

https://www.youtube.com/watch?v=KCD-uY3iDMU&t=2s

கமல்ஹசனே தன்னை பாராட்டிவிட்டார் என்று நினைத்த தனலட்சிமி மீண்டும் தன்னுடைய வேலையே காட்டிவருகிறார். இதனாலேயே மற்ற போட்டியாளர்கள் இவரின் பக்கத்தில் போகவோ அல்லது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடவோ பயப்படுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று தனலட்சிமிக்கும் மணிகண்டனுக்கு வாக்குவாதம் ஏற்ப்பட்டது அது கடைசியில் மிகப்பெரிய சண்டையாக மாறியது ஆனால் கடைசியில் மணிகண்டனும் தனலட்சிமியும் சமாதானமாகி விட்டனர். இதனால் இவரைப்பற்றி தெரிந்து கொள்ள பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சிமி பின்னர் தொடந்து விடீயோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். மேலும் சில குறும் படங்களிலும் வெளிவராத இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அப்படிதான் தனலட்சிமி நடித்திருந்த "பறை" என்ற பாடல் தற்போது வைரலாகி வருகிறது. தனலட்சிமி பிக் பாஸ் வருவதற்கு மாதங்களுக்கு முன்னர் இப்பாடலானது வெளியிடப்பட்டது. இப்பாடலில் சாதியை பற்றிய ஆழமான கருத்துக்களை பறையின் மூலம் கூறியிருந்தனர். மேலும் இப்பாடலில் மிகவும் பிரமாதமாகவே தனலட்சிமியின் நடிப்பு இருந்தது.

இப்படியிருக்கும் போதுதான் தனலட்சிமி பிக் பாஸ் சீசன்6ல் வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்து கொண்டு தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறார். அதுவும் இவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் வீடியோவாக நெட்டிசன்கள் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருவதால். இவரை பற்றி தெரிந்துகொள்ள பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தான் இவர் நடித்திருந்த "பறை" பாடலானது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full