தயவு செஞ்சி இத ஒளிபரப்பாதீங்க, காலில் விழுந்த தனலட்சுமி - என்ன காரணம் தெரியுமா ? அப்படி என்ன பண்ணார்
தயவு செய்து இதை ஒளிபரப்பாதீர்கள் என்று தனலட்சுமி பிக் பாஸ் இடம் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஐந்தாவது வாரம் முடிய இருக்கிறது.
இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். மேலும், இதுவரை நடந்த ஏகப்பட்ட சர்ச்சைகளில் தனலட்சுமி தான் சிக்கி இருந்தார். இருந்தாலும், தனலட்சுமி பக்கம் நியாயம் இருக்கிறது என்று கமலும், மக்களும் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் தனலட்சுமி குறித்து அவருடைய நண்பர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, தனலட்சுமி இரண்டு படம் நடித்திருக்கிறார். ரெண்டு படமும் வெளியாகவில்லை.
தனலட்சுமி நண்பர்கள் அளித்த பேட்டி:
ஒரு படத்தின் புரமோசனுக்காக தான் அவள் அவார்டு ஈவண்ட்டை நடத்தி இருந்தார். காசு இல்லாமையா அவள் அந்த நிகழ்ச்சியை நடத்துவாள். நிகழ்ச்சியில் அவள், நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன். அவர் மெக்கானிக்கல் ஷாப் நடத்தி இருக்கிறார். அவருடன் சேர்ந்து எல்லாம் அவள் வீடியோ போட்டு இருக்கிறார். அம்மா துணிக்கடையை நடத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் அவர் பைனாஸ் விடுகிறார். சொல்லப்போனால், அவள் நடித்த இரண்டு படத்தையும் எடுத்ததே அவர்கள் தான் என்று கூறி இருக்கிறார்கள்.
https://twitter.com/BBFollower7/status/1591169665547767808
தனலட்சுமி குறித்த சர்ச்சை:
இப்படி தனலட்சுமி நண்பர்கள் அளித்த பேட்டியை அடுத்து நெட்டிசன்கள் பலரும் தனலட்சுமி உடைய நடவடிக்கையை அதிகமாக கவனித்து வருகிறார்கள். அதிலும் கடந்த இரண்டு வாரமாக தனலட்சுமி செய்யும் செயல்கள் ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது. மேலும் பிக் பாஸ் அவர்கள் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்திருந்தார். அப்போது தனலட்சுமிக்கு இன்விசிபிள் டாஸ்க் கொடுத்திருந்தார்.
பிக் பாஸிடம் தனலட்சுமி சொன்னது:
போட்டியாளர்கள் என்ன பண்ணாலும் எதுவுமே செய்யக்கூடாது என்று கொடுத்திருந்தார். இதனால் கடுப்பான தனலட்சுமி பிக்பாஸ் இடம் சென்று, நான் இப்போது வீட்டுக்கு போக வேண்டும். எனக்கு மட்டும் இந்த டாஸ்க் கொடுப்பது சரி இல்லை என்றெல்லாம் பேசி துணியை பேக் செய்தார். பின் சிறிது நேரம் கழித்து பிக் பாஸ் இடம் நான் செய்தது தவறு. என்னை மன்னித்து விடுங்கள். நான் பொறுமையாக இருக்க தான் நீங்கள் இந்த டாஸ்க் எனக்கு கொடுத்தீர்கள். ஆனால், கோபம் என்னை அறியாமல் வந்து விடுகிறது.
https://twitter.com/BBFollower7/status/1591170495109795840
மன்னிப்பு கேட்ட தனலட்சுமி :
டாஸ்கில் யாரையும் இரிடேட் செய்யக்கூடாது என்று நினைத்தேன். இருந்தாலும், சில போட்டியாளர்களை இரிடேட் செய்துவிட்டேன். நான் வெளியே போகிறேன் என்றெல்லாம் சொல்லியிருந்தேன். அது தவறு என்று எனக்கு புரிந்தது. என்னை மன்னித்து விடுங்கள். நான் அப்படி பேசியதை டெலிகாஸ்ட் செய்யாதீர்கள். கஷ்டப்பட்டு தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் வெளியில் போக விரும்பவில்லை என்று கூறியிருந்தார். எவிக்ஷன் நடக்கும் நேரத்தில் தனலட்சுமி இப்படி பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.