MLM மோசடி முதல், குருபகவான் Sarees investment வரை - தனலட்சுமி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவரின் தாயார் அளித்த விளக்கம்.
பிக் பாஸ் தனலட்சுமி குறித்து அவருடைய நண்பர்கள் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், இதுவரை நடந்த ஏகப்பட்ட சர்ச்சைகளில் தனலட்சுமி தான் சிக்கி இருந்தார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
https://twitter.com/RazzmatazzJoe/status/1590707501695393796
இருந்தாலும், தனலட்சுமி பக்கம் நியாயம் இருக்கிறது என்று கமலும், மக்களும் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். வழக்கம்போல் தனலட்சுமி ஒவ்வொரு டாஸ்கிலும் எல்லா போட்டியாளர்களிடையுமே சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அந்த வகையில் பேக்டரி டாஸ்க்கில் கூட மணிகண்டனுக்கும் தனலட்சுமிக்கும் பயங்கர சண்டை நடந்திருக்கிறது. இந்த நிலையில் தனலட்சுமி குறித்து அவருடைய நண்பர்கள் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தனலட்சுமி நண்பர்கள் அளித்த பேட்டி;
அதில் அவர்கள் கூறியிருப்பது, தனலட்சுமி இரண்டு படம் நடித்திருக்கிறார். ரெண்டு படமும் வெளியாகவில்லை. ஒரு படத்தின் புரமோசனுக்காக தான் அவள் அவார்டு ஈவண்ட்டை நடத்தி இருந்தார். அந்த நிகழ்ச்சியை நடத்தியதே அவள் தான். காசு இல்லாமையா அவள் அந்த நிகழ்ச்சியை நடத்துவாள். நிகழ்ச்சியில் அவள், நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடன் வாங்கி துணி வாங்கினேன் என்று சொல்வதெல்லாம் பொய்.
https://www.youtube.com/watch?v=ihhvYQJ1iho
தனலட்சுமி பற்றிய உண்மை:
அதையெல்லாம் அவள் சொல்லும்போது கேட்க நாராசமாக இருந்தது. அவளுக்கு அப்பா இருக்கிறார்.அவர் மெக்கானிக்கல் ஷாப் நடத்தி இருக்கிறார். அவருடன் சேர்ந்து எல்லாம் அவள் வீடியோ போட்டு இருக்கிறார். அம்மா துணிக்கடையை நடத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் பைனான்சும் செய்கிறார். சொல்லப்போனால், அவள் நடித்த இரண்டு படத்தையும் எடுத்ததே அவர்கள் தான். அந்த அளவிற்கு பணம் இருக்கிறது. MlM விளம்பரம் மூலம் பல பேரை ஏமாற்றி சம்பாதித்து இருக்கிறார். செருப்பு மட்டுமே 12 ஆயிரத்துக்கு எடுப்பா. அவள் பணம் இல்லை என்று சொல்வதெல்லாம் பொய்.
தனலட்சுமியின் சர்ச்சை Tik Tok வீடியோக்கள் :
நினைத்த நிமிடத்தில் எல்லாம் வாங்குவாள் என்று கூறி இருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க தனலட்சுமியின் சில டிக் டாக் வீடியோக்கள் எல்லாம் சமீபத்தில் வைரலாக பரவியது. அதிலும் குறிப்பாக தனலட்சுமி புகை பிடிப்பது, முட்டைகளை போட்டு உடைப்பது, ரூபாய் நோட்டுகளை தீயில் போட்டு எரிப்பது என்று பலர் சர்ச்சையான வீடியோக்கள் வெளியாகி தனலட்சுமியை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=CZRBZ9ORS9I&t=21s
தனலட்சுமி தாயார் விளக்கம் :
இப்படி ஒரு நிலையில் தனலட்சுமி என் தாயார் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர் தனலட்சுமி குறித்து அவரது நண்பர்கள் சொல்லும் அனைத்தும் பொய்/ காசு கொடுத்து எல்லாம் நாங்கள் பிக் பாஸ்ஸுக்கு அவளை அனுப்பவில்லை. அதேபோல குரு பகவான் சாரீஸ் கடை எங்களுடையது கிடையாது. அதில் ஒரு பிரமோஷனுக்காக தான் அப்படி செய்தோம். நாங்கள் ஒன்றும் இலட்சக்கணக்கில் பணம் வைத்திருக்கவில்லை எங்களுக்கு 80 லட்சம் கடன் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.