பிக் பாஸ் பிரபலம் தனலட்சுமி புது கார் வாங்கி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகப் பிரபலமாக திகழ்வது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதன்முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும், தமிழில் இந்த நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல பேருக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகளை கிடைத்திருக்கிறது. நிறைய பேர் சினிமாவில் நுழையத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்றும் சோசியல் மீடியாவில் பேசப்படுகிறது. அந்த வகையில் பிக் பாஸின் மூலம் எப்படியாவது சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்று பல கனவுகளுடன் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் தனலட்சுமி.

Advertisement

டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. இவருக்கு சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நிறைய ரீல்ஸ் வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு இருக்கிறார். இதனால் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இருந்தாலும், தனலட்சுமி பக்கம் நியாயம் இருக்கிறது என்று கமலும், மக்களும் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். வழக்கம் போல் தனலட்சுமி ஒவ்வொரு டாஸ்கிலும் எல்லா போட்டியாளர்களிடையுமே சர்ச்சையில் சிக்கியிருந்தார். பின் இவர் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அசீம் முதலிடத்தையும், அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள்.

Advertisement

மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் தனலட்சுமி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இவரை லட்சக்கணக்கான நபர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனலட்சுமி அவர்கள் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்.

Advertisement

இந்நிலையில் தனலட்சுமி புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனலட்சுமி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த காரினுடைய விலை சுமார் 10 லட்சம் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், புதிய காரைஓட்டிக்கொண்டு தோழியுடன் Vibe செய்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் தனலட்சுமி.

Advertisement