சிகிரெட்டை ஊதி தள்ளும் பிக் பாஸ் தனலட்சுமி - வைரலாகும் வீடியோ இதோ.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
https://www.youtube.com/shorts/V7zQGk-q4Tw
வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. மேலும், முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி எண்ட்ரியாகி இருக்கிறார்.இந்த சீசனில் பல டிக் டாக் பிரபலங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தனலட்சுமியும் ஒருவர்.
இவர் ஈரோடை சேர்ந்தவர். இவர் டிக்டாக் வீடியோக்கள் மூலம் 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை பெற்றவர். தற்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை அதிகமாக வெளியிட்டு வருகிறார்.சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில குறும்படங்களிலும் பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல ஹேட்டர்ஸ்களை உருவாக்கிக்கொண்டார்.
https://www.youtube.com/shorts/OmQosciNH04
அதற்கு முக்கிய காரணமே இவர் ஆரம்பம் முதலே ஜிபி முத்துவை பகைத்து வந்தது தான். சிலர் தனலட்சுமியை இந்த சீசன் ஜூலியா? வனிதாவா? அர்ச்சனாவா? என்று கேள்வி கேட்டு இருந்தார்கள். மேலும், தனலட்சுமி நாமிநேசனின் வந்தால் நிச்சயம் அவரை வெளியேற்றுவோம் என்று ஜி பி முத்து ஆர்மி சமூக வலைதளத்தில் சபதம் போட்டு வருகிறது. இதனால் இவரை தாக்கி பல பதிவுகளை போட்டு வருகின்றனர்.
மேலும், இவர் டிக் டாக்கில் போட்ட பல வீடியோக்களை பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் இவர் முட்டைகளை போட்டு உடைத்து நாசம் செய்த வீடியோவை பகிர்ந்து 'இவர் தான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவரா' என்று கேலி செய்தனர். இப்படி ஒரு நிலையில் இவர் சிகெரெட்டை ஊதி தள்ளி ரீல்ஸ் போட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்து இவரை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றார்.